இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46
- உணவு வழியின் நீண்ட பகுதி. இரைப்பைக்குப் பின்னுள்ளது. சிறுகுடல், பெருங்குடல் என இருவகை.
23. கழிவழி என்றால் என்ன?
- உடலுக்கு வெளியே அமைந்துள்ள பொதுக் கழிவழி. இதன் வழியாகச் சிறுநீர்க் கழிவு, முட்டை முதலியவை செல்லும். எ-டு தவளை
24. அலை இயக்கம் என்றால் என்ன?
- உணவு வழிச் சுவரிலுள்ள தசைகள் உண்டாக்கும் நெளி வியக்கம். இதனால் உணவு அடுத்தடுத்துள்ள உறுப்புகளுக்குச் செல்ல முடிகிறது.
25. செரித்தல் என்றால் என்ன?
- நொதிச் செயலால் அரிய பொருள்கள் எளிய பொருள்களாக மாறுதல். எ-டு. அமைலேஸ் ஸ்டார்ச்சைச் சர்க்கரையாக்கும். பொதுவாகச் செரித்தல் இரைப்பையிலும் முன்சிறுகுடலிலும் நடைபெறுவது. இது ஒரு வேதிச்செயலே. இதைத் தொடர்வது உட்கவரலும் தன்வயமர்தலும் ஆகும்.
26. நொதிகள் என்பவை யாவை?
- உயிரியல் வினை ஊக்கிகள். அரிய பொருள்களை எளிய பொருள்களாக மாற்றுபவை. காட்டாக மாப்பொருள் செரிக்கக்கூடிய சர்க்கரையாக மாறும், டயலின், அமைலேஸ், பெப்சின் முதலியவை நொதிகள் ஆகும்.
27. உட்கவரல் என்றால் என்ன?
- செரித்த உணவு குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்படுதல். இது ஓர் இயற்பியல் செயல்.
28. தன்வயமாதல் என்றால் என்ன?
- செரித்த உணவு சிறுகுடலில் உறிஞ்சப்பட்டுத் திசுக்களில் முன் கணியமாக மாறுதல். இது வளர்மாற்றம் ஆகும்.
29. கேசின் என்பது யாது?
- எளிதில் செரிக்கக்கூடிய பால் புரதம்.