இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
48
41. தமனி என்றால் என்ன?
- உயிர்வளி கலந்த குருதியை உடலின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் குழாய்.
42. சிரை என்றால் என்ன?
- கரி இரு ஆக்சைடு கலந்த குருதியை இதயத்திற்கு எடுத்து வருவது.
43. கீழ்ப்பெருஞ்சிரை என்றால் என்ன?
- உடலின் கீழ்ப் பகுதிகளிலிருந்து குருதியை இதயத்திற்குக் கொண்டு வரும் பெரும் குருதிக்குழாய்.
44. மேற்பெருஞ்சிரை என்றால் என்ன?
- உடலின் மேல் பகுதிகளிலிருந்து குருதியை இதயத்திற்குக் கொண்டும் குருதிக் குழாய்.
45. தமனியையும் சிரையையும் இணைக்கும் குருதிக்குழாய்கள் யாவை?
- தந்துகிகள்.
46. இதயக் குருதிக் குழாய்கள் யாவை?
- இவை இதயத் தமனிகள் (2), இதயச்சிரைகள் (2) ஆகியவை. இதயத் தசைகளுக்கு குருதி வழங்குபவை.
47. திறப்பிகள் (வால்வுகள்) என்பவை யாவை?
- ஒரு சமயம் மூடி மற்றொரு சமயம் திறக்கும் அமைப்பு. கதவு போன்றது. இதயத்திலும் குருதிக் குழாய்களிலும் உள்ளன. எ-டு. ஈரிதழ்த் திறப்பி, மூவிதழ்த் திறப்பி.
48. ஈரிதழ்த் திறப்பியின் வேலை என்ன?
- இது இதயத்தின் இட மேலறைகளும் கீழறைக்கும் இடையே உள்ளது. கீழறைக் குருதியைப் பெரும் தமனிக்குச் செலுத்துவது.
49. மூவிதழ்த் திறப்பி என்றால் என்ன?
- இது வல மேலறைக்கும் கீழறைக்கும் இடையிலுள்ளது. வலக் கீழறை சுருங்கும் பொழுது குருதி வெளியேறும். அதாவது நுரையீரல் தமனிக்குச் செல்லும்.
50. இதயவிரிவு என்றால் என்ன?
இதயச் சுழற்சியின் ஒரு பகுதி. இதில் இதயக் கீழறை-