பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56


115. முழங்காற்சில் என்றால் என்ன?

முழங்கால் மூட்டின் முன்தசைநாணிலுள்ள எஸ் வடிவ எலும்பு. பின் காலை நீட்ட உதவுவது.

116. எலும்புகளில் மிகப் பெரியது எது?

தொடை எலும்பு.

117. எலும்புகளில் மிகச் சிறியவை எவை?

செவிச் சிற்றெலும்புகள்

5. தசை மண்டலம்

118. தசை இயக்க இதயம் என்றால் என்ன?

நேரிடையாகத் தசைகளால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் இதயம். எ-டு எல்லா முதுகு எலும்பு விலங்குகளுக்கும் உண்டு.

119. தசை இயல் என்றால் என்ன?

தசைகளை ஆராயுந்துறை.

120. தசையின் தனிப்பண்புகள் யாவை?

1. சுருங்குதல்
2. கடத்தல்.

121. தசை மண்டலம் என்றால் என்ன?

தசைகளாலான தொகுதி. எலும்புகளைப் பிணைத்து உடலுக்கு இயக்கத்தையும் அழகையும் தருவது.

122. தசை என்பது யாது?

ஓர் இணைப்புத்திசு. சுருங்குவது இதன் தனிப் பண்பு.

123. இதன் வகைகள் யாவை?

1. வரித்தசை, இயக்குத்தசை - முத்தலை, இருத்தலைதசை.
2. வரியில்லாத்தசை, இயங்குதசை - உள்ளுறுப்புத்தசை, இதயத்தசை.

124. சுருக்குத்தசைகள் என்பவை யாவை? இவை எங்குள்ளன? எவ்வாறு வேலை செய்கின்றன?

இவை ஒருவகை இயங்குதசைகளே. இவற்றில் தசை நார்கள் வட்டமாகவும், குறுக்காகவும் அமைந்துள்ளன. இரைப்பையின் அடிப்பகுதி, கழிவாய், கண்மணி. குறுக்குநார்கள் சுருங்கும்பொழுது இவற்றின் துளை