பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


விரியும். வட்டநார்கள் சுருங்கும்பொழுது துளை சுருங்கும். காட்டாகக் கண்மணி சுருங்கி விரிவதைக் கருவிழிப் படலத்தசை கட்டுப்படுத்துகிறது.

125. தசையின் வேலைகள் யாவை?

உடல் இயக்கம், நிலைப்பு, உடல் உருவம் ஆகியவற்றிற்கு இவையே காரணமாகும்.

126. நம் உடலிலுள்ள தசைகள் எத்தனை?

தசைகள் 400.

127. தசை நலிவு என்றால் என்ன?

வைட்டமின் E குறைவதால் தசையின் இயக்கம் குறைதல்.

128. இரு தலைத் தசை என்றால் என்ன?

ஓர் இயக்குத்தசை, நடுவில் பருத்தும் முனைகளில் குறுகியும் இருக்கும். மேற்கை எலும்பில் உள்ளது. இது சுருங்கும்பொழுது முன்கை மடங்குகிறது.

129. இதற்கு இப்பெயர் வரக் காரணம் என்ன?

இரு தசைநாண் உள்ளதால் இப்பெயர்.

130. நீட்டுதசை (விரிதசை) என்றால் என்ன?

முன் கையை நீட்ட உதவும் முத்தலைத்தசை

131. மடக்குதசை என்றால் என்ன?

முன்னங்காலை மடக்கப் பயன்படும் இருதலைத்தசை.

132. கெண்டைக்கால் தசை என்றால் என்ன?

இது ஓர் இயக்குத்தசை இதிலிருந்து குதிகாலோடு சேரும் தசைநாண் அச்சில்லஸ் தசைநாண் எனப்படும். இத்தசை நடத்தல், ஓடுதல், குதித்தல், நிற்றல் முதலிய இயக்கங்களுக்கு முதன்மையானது.

133. நாத்தலைத்தசை என்பது யாது?

முதுகு எலும்பு விலங்குகளின் தொடைத்தசை. கால்வரை நீளுவது.

134. தசைப்பிடிப்பு என்றால் என்ன?

தசையின் குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் வலிதரும் சுருக்கம். உடற்பயிற்சியின் பொழுது ஏற்படுவது. தசையை நீட்டி இதைப் போக்கலாம்.

135. குறுக்குத்தட்டம் (உதரவிதானம்) என்றால் என்ன?