இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஏற்படுவது.
206. இந்த ஆய்வுக்கு இவர் பயன்படுத்திய இரு பொருள்கள் யாவை?
- நாய், மணி
207. இதன் வகைகள் யாவை?
- 1. இடைநிலைக் கட்டுப்படுத்தல்
- 2. இயக்கக் கட்டுப்படுத்தல்
- 3. சமூகக் கட்டுப்படுத்தல்.
208. முழங்கால் மறிவிளை என்றால் என்ன?
- முழங்கால் உதறல். முழங்கால் பந்தகம் தட்டப்படுவதால், கால் முன்தள்ளப்படும்.
9. சுரப்பி மண்டலம்
209. சுரப்பி என்றால் என்ன?
- சுரக்கும் உறுப்பு. இது சுரக்கும் நீர் சுரப்பு எனப்படும்.
210. சுரப்பியின் வகைகள் யாவை?
- 1. நாளமுள்ள சுரப்பிகள் - குழாய் மூலம் தங்கள் சுரப்புகளைச் செலுத்துபவை. எ-டு உமிழ் நீர்ச்சுரப்பி.
- 2. நாளமில்லாச் சுரப்பிகள் - தங்கள் சுரப்புகளை நேரிடையாகக் குருதியில் சேர்ப்பவை. எடு, தொண்டைச் சுரப்பி, மூளையடிச் சுரப்பி.
211. சுரப்பி மண்டலம் என்றால் என்ன?
- நாளமுள்ள சுரப்பிகள், நாளமில்ல கரப்பிகள் கொண்ட தொகுதி. சுரத்தல் முதன்மையான வேலை.
212. நாளமில்லாச் சுரப்பிகள் என்பவை யாவை?
- குழாய் இல்லாமல் தம்முடைய சுரப்புகளை நேரடியாகக் குருதியில் சேர்க்கும் சுரப்பிகள், தைராய்டு, பிட்யூட்டரி, ஆட்ரினல் ஆகிய மூன்றும் முதன்மையானவை.
213. வளர்ச்சியாக்கிகள் (ஆர்மோன்கள்) என்றால் என்ன?
- வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் முதலிய செயல்களை ஒழுங்குபடுத்தும் உடலியல் வினையூக்கிகள். எ.டு தைராக்சின் (தைராய்டு) பிட்யூட்டரின் (பிட்யூட்டரி)