பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73


உயிரிக்கு மாற்றிப் பொருத்துதல். எ-டு, சிறு நீரகத்தை மாற்றிப் பொருத்துதல்.

268. வாழ்நாள் என்பது யாது?

பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள காலம். இது உயிர்களுக்குத் தகுந்தவாறு மாறுபடும். ஓராண்டு வாழும் விலங்கும் பல்லாண்டுகள் வாழும் விலங்கும் உண்டு. மனிதனின் சராசரி வாழ்காலம் 100 ஆண்டுகள்.

269. வாழ்க்கைச்சுற்று என்றால் என்ன?

உயிரிகளின் வாழ்க்கையில் காணப்படும் வளர்ச்சி நிலைகள். பூச்சி முதலியவற்றில் நான்கு நிலைகளிலும் கீழினத் தாவரங்களில் இருநிலைகளிலும் காணப்படுவது. பொதுவாகக் கருவணு தோன்றி முதிரும் வரை உள்ள நிலைகளை வாழ்க்கைச்சுற்று உள்ளடக்கியது.

270. கலப்பின உயிரி என்றால் என்ன?

வேறுபட்ட இருவகை உயிர்களின் கால்வழி. எ-டு கோவேறு கழுதை.

271. பெற்றோர் கலப்பு என்றால் என்ன?

ஒரு கலப்பினத்தின் பாலணு, அதன் பெற்றோர் பாலணுக்கள் ஒன்றினால் கருவுறுதல்.

272. செயற்கை விந்தேற்றம் என்றால் என்ன?

செயற்கை முறையில் விந்தினைப் பெண் கருப்பையில் செலுத்துதல். உயர்வகைக் கலப்பு விலங்குகளை உண்டாகக் இம்முறை பயன்படுவது. எ-டு கறவை மாடுகள்.

273. மலடாக்கல் என்றால் என்ன?

ஆண் பெண் இருப்பெருக்க உறுப்புகளை நீக்கி, இனப்பெருக்க ஆற்றல் இல்லாமல் செய்தல்.

274. இருபால் என்றால் என்ன?

ஆண், பெண் ஆகிய இருபால் இனக் கண்ணறைகளைத் தோற்றுவிக்குந் தன்மை. எ-டு மண்புழு.

275. இனப்பெருக்க மாற்றம் என்றால் என்ன?

சில விலங்குகளின் வாழ்க்கைச் சுழற்சியில் கலவி இனப் பெருக்கமும் கலவி இலா இனப்பெருக்கமும் மாறி மாறி