இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஓட்டிளரி. நண்டுவகை விலங்குகளில் இளம் உயிர்.
284. வால் வேற்றிளரி என்றால் என்ன?
- முதல் தண்டுள்ள விலங்குகளின் தனிபாலுயிரியின் கருமுட்டையிலிருந்து உண்டாகும் இளம் உயிர்.
285. புழு இளரி என்றால் என்ன?
- இது காலும் தலையுமற்ற இனம் உயிர். சில கணுக்காலி களில் காணப்படுவது. காற்றிலும் காணப்படும். எ-டு ஈ போன்ற ஈரிறக்கைப் பூச்சிகள்.
286. வேற்றிளரி என்றால் என்ன?
- முட்டையிலிருந்து வெளிவரும் இளமுயிர்.
287. வேற்றிளரியின் பல வகைகள் யாவை?
1. கம்பளிப்புழு | - | வண்ணத்துப்பூச்சி |
2. தலைப்பரட்டை | - | தவளை |
3. தட்டை இளரி | - | ஓபிலியா |
4. மருங்கிளறி | - | கடல் சாமந்தி |
5. பைலிடியம் இளரி | - | குழல் வாய்ப்புழு |
6. மியூல்லர் இளரி | - | தட்டைப்புழு |
7. ஆரஇளரி | - | நட்சத்திரமீன். |
288. தட்டை இளரி என்பது யாது?
- குழிக்குடல்களின் வேற்றளரி.
289. மருங்கிளரி என்றால் என்ன?
- கடல் சாமந்திகளுக்குரிய இளரி.
290. இறட்டை இறகிளரி என்றால் என்ன?
- நட்சத்திர மீனுக்குரிய இருமருங்கிளரி.
291. முதிர் இளரி என்றால் என்ன?
- ஆம்பிலோனிப்போமா பேரின வகைகளின் வாலுள்ள இரட்டை வாழ்விகள். இவற்றின் இளம் உயிர் முதிர்ந்து வாழ்நாள் முழுதும் இனப்பெருக்கம் செய்ய வல்லது.
292. உதட்டிளரி என்றால் என்ன?
- நன்னீர்ச்சிப்பி வகை மட்டியின் இளம் உதட்டு உயிரி.
293. முழு உருமாறிகள் என்பவை யாவை?
தம் வாழ்க்கைச் சுற்றில் முழு உருமாற்றம் பெறும் பூச்சிகள் வண்ணத்துப்பூச்சி. இதில் முட்டை , கம்பளிப்