பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81


17. இது அடங்கியுள்ள பொருள்கள் யாவை?

பால், முட்டை, பசுங்காய்கறிகள்.

18. இதன் குறை நோய் யாது?

நாக்கழற்சி.

19. வைட்டமின் B3 இன் வேலை யாது?

வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது.

20. இது அடங்கியுள்ள உணவுப் பொருள்கள் யாவை?

முட்டை மஞ்சள், ஈஸ்டு, கல்லீரல்.

21. இதன் குறைநோய் யாது?

தசைப்பிடிப்பு.

22. பான்தோதெனிகக்காடி என்றால் என்ன?

வைட்டமின் B தொகுதியைச் சார்ந்தது. இது குறையுமானால் தோல் கோளாறு, உணவு வழிக்கோளாறு ஏற்படும்.

23. அடர்மின் என்றால் என்ன? இது எவற்றில் காணப்படுகிறது?

வைட்டமின் B4 பால்காடி நுண்ணுயிரிகள், சில பூஞ்சைகள். ஈஸ்டுகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது

24. வைட்டமின் B4 இன் வேலை யாது?

அமினோ காடித்தொகுப்பைக் கட்டுப்படுத்துகிறது.

25. இது அடங்கியுள்ள உணவுப்பொருள்கள் யாவை?

ஈரல், இலைக்காய்கறிகள்.

26. இதன் குறைநோய் யாது?

உறக்கமின்மை.

27. வைட்டமின் B12 இன் வேலை யாது?

குருதி உண்டாக இன்றியமையாதது.

28. இது அடங்கியுள்ள உணவுப் பொருள்கள் யாவை?

ஈரல், இறைச்சி.

29. இதன் குறைநோய் யாது?

குருதிச் சோகை.

30. போலிகக் காடி என்றால் என்ன?

நீரில் கரையக்கூடிய வைட்டமின் B தொகுதியில் ஒன்று.

வி.6.