பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


வைட்டமின் D3 - கோலிகால்சிபெரால்

42. வைட்டமின் E இன் வேலை என்ன?

இதன் வேதிப்பெயர் டோக்கோஃபெரால் கொழுப்பில் கரைவது. ஆற்றல் அளிப்பது.

43. இது அடங்கியுள்ள உணவுப் பொருள்கள் யாவை?

முருங்கைக்காய், இறைச்சி.

44. இதன் குறைநோய் யாது?

மலடு.

45. வைட்டமின் H இன் வேதிப்பெயர் என்ன?

பயாடின்.

46. வைட்டமின் K இன் வேலை என்ன?

இதன் வேதிப்பெயர் பில்லோகுயினோன். கொழுப்பில் கரைவது. குருதிக்கட்டைத் தூண்டுவது.

47. இது அடங்கியுள்ள உணவுப்பொருள்கள் யாவை?

மஞ்சள் கரு, பால், பசுங்காய்கறிகள்.

48. வைட்டமின் G இன் வேதிப்பெயர் என்ன?

ரிபோபிளேவின்

வைட்டமின் இன் வகைகள் யாவை?

K1 - பைட்டனோடையோன்.
K2 - மெனாகுயுனோன்.
K3 - மெனாடையோன்.

50. வைட்டமின் L இன் வேலை யாது?

பால் சுரக்கக் காரணமாக இருப்பது.

51. வைட்டமின் L இன் இரு வகைகள் யாவை

வைட்டமின் L1 - மாட்டுக் கல்லீரல் பிழிவில் உள்ளது.
வைட்டமின் L2 - ஈஸ்ட்டில் உள்ளது.

52. வைட்டமின் M இன் வேதிப்பெயர் என்ன?

போலிகக் காடி.

62. குறைநோய்கள் என்றால் என்ன?

ஊட்ட உணவில் வைட்டமின்கள் குறையும் பொழுது ஏற்படும் நோய்கள் எ-டு வைட்டமின் B குறைந்தால்