பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84


பெரி-பெரி ஏற்படும்.

54. குடிநீர்மங்கள் என்றால் என்ன?

பானங்கள். பருகுவதற்குத் தகுதியுள்ளவை. தேநீர், பால், இளநீர் முதலியவை இயற்கைப் பானங்கள். பெப்சி, கோகோகோலா முதலியவை செயற்கைப் பானங்கள்.

2. உணவு

55. உணவு என்றால் என்ன?

உண்டபின் செரிக்கத்தக்கதும் தன்வயமாகக் கூடியதும் உணவாகும். எ-டு. அரிசி.

56. இரைஇயல் என்றால் என்ன?

உணவுத்தேர்வு, உணவு உண்டாக்கல், உண்ணல் ஆகியவை பற்றி ஆராயுந்துறை. உணவியல் என்றுங் கூறலாம்.

57. உணவைக் குவளையில் அடைத்தல் என்றால் என்ன?

உணவைப் பாதுகாக்கும் முறைகளில் ஒன்று. எ-டு மாங்காய் ஊறுகாய்.

58. உணவு மதிப்பு என்றால் என்ன?

திசுவில் உணவு கணற்சி அடையும்பொழுது உண்டாகும் ஆற்றல்.

59. விரைவுணவு என்றால் என்ன?

உண்ணும் பொழுது விரைவாகக் கரையும் உணவு. எ-டு பனிக்குழைவு, பனிச்சூப்பி.

60. சமன்செய்த உணவு என்றால் என்ன?

சமச்சீர் உணவு. உணவின் பகுதிகள் குறிப்பிட்ட வீதத்தில் அமைந்து தோராயமாக 3000 கலோரி வெப்பத்தைத் தரும் உணவு.

61. உணவின் ஆறுபகுதிகள் யாவை?

மாப்பொருள், புரதம், கொழுப்பு, நீர், தாது உப்புகள்,

62. சமன் செய்த உணவின் வேலைகள் யாவை?

1. உடலுக்கு வளர்ச்சி அளிக்கிறது.

2. உடலுக்கு வெப்பம் தந்து, உடலின் வெப்பநிலையை