பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


ஒன்று. எ-டு திமிங்கிலம்.

89. முழு விலங்கு ஊட்டம் என்றால் என்ன?

பெரும்பாலான விலங்குகளில் இது உண்டு. இதில் உட்கொள்ளல், விழுங்குதல், செரித்தல், உட்கவர்தல், தன்வயமாதல், வெளியேற்றல் என்னும் செயல்கள் நடைபெறும்.

90. தன்விழுங்கள் என்றால் என்ன?

தற்செரிமானம். ஓர் உயிரியின் குறிப்பிட்ட கண்ணறைகள் மிகையாக உள்ள அல்லது சிதைந்த கண்ணறை உறுப்புகளைச் செரிக்க வைத்தல்.

91. நுண் விழுங்குணவு கொள்ளல் என்றால் என்ன?

தொங்குணவு கொள்ளல். நுண்ணுவுகளைக் கொள்ளல். பரமேசியம் முதலிய உயிரிகள்.

92. நுண்ணுயிரி விழுங்கிகளை யார் எப்பொழுது கண்டறிந்தனர்?

1915-1916 இல் பிரடரிக் வில்லியம் டுவாட், பெலிக்ஸ் ஹிபாட்டெகரெலி ஆகிய இருவரும் கண்டறிந்தனர்.

93. பெருவாழ்வியல் என்றால் என்ன?

வாழ்நாள் நீட்டிப்பை ஆராயுந் துறை.

94. பெரு ஊட்டப் பொருள் என்றால் என்ன?

ஒரு தாவரத்தின் இயல்பான வளர்ச்சிக்குத் தேவைப்படும் அடிப்படைத் தனிமம். எ-டு கரி, நீர்வளி, இரும்பு, மக்னீசியம், நைட்ரஜன் முதலியவை.

95. பெருவிழுங்கி என்றால் என்ன?

இது பெரிய அமீபா அணு. குச்சி வடிவ உயிரிகளை அழிப்பது. சிதைந்த கண்ணறைகளையும் சிவப்பணுக் களையும் அழித்துவிழுங்க வல்லது. இவ்வாறு விழுங்கும் செயல் பெரு விழுங்கல் ஆகும். நோய்க்கு எதிராக உள்ள பாதுகாப்பு அமைப்பு இது.

96. விழுங்கணுக்கள் என்பவை யாவை?

ஒருவகைக் குருதி வெள்ளணுக்கள். தீங்குதரும் வெளிப் பொருள்களையும் குச்சிவடி உயிரிகளையும் விழுங்கிச் செரிக்க வைப்பவை.

97. ஒட்டுண்ணி என்றால் என்ன?