பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


கத்தி, ஊசி, கூரிய தகடு முதலியவற்றால் ஏற்படும் கீறல்கள். புரை எதிர்ப்பு மருந்து தடவினால் போதும். எ-டு. அயோடக்ஸ் அல்லது அயோடின் கரைசல்.

11. புண்கள் என்றால் என்ன?

தீ, வெப்பம், வேதிப்பொருள் முதலியவற்றால் தோல் திசுக்கள் தைவுறுதல். நோய்த் தொற்றல், அதிர்ச்சி, ஊட்டக்குறை முதலியவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புண் ஆழமாக இருந்தால், கட்டுப் போட வேண்டும்.

12. புண்களின் வகைகள் யாவை?

1. செம்புண்
2. கொப்புளப் புண்
3. தோல்நீங்குபுண்
4. தீப்புண்

13. நைவுப்புண் என்றால் என்ன?

நோய், காயம், புண் ஆகியவற்றால் திசுக்களில் ஏற்படும் மாற்றம்.

14. கன்றிப்புகள் என்றால் என்ன?

ஊமைக் காயங்கள், தோல் சிதையாமல் அதற்கடியிலுள்ள திசுக்களில் குருதி வெளிப்படுவதால் தோலின் நிறம் கருஞ்சிவப்பாதல்.

15. தும்மல் என்றால் என்ன?

இச்செயலில் குரல்வளை திறந்திருக்கும். ஆழ்ந்த உள் மூச்சும் வலுவற்ற வெளிமூச்சும் இருக்கும். பாதி மூக்கு வழியாகவும் பாதி வாய்வழியாகவும் காற்று செல்லும். நெடி, நுண்கிருமிகள் முதலியவை இதற்குக் காரணிகள்.

16. குறட்டை விடுதல் என்றால் என்ன?

உள்நாக்கு அதிர்வதால் இஃது உண்டாகிறது. உறங்கும் பொழுது வாயினால் மூச்சுவிடுவதால் இது நடை பெறுகிறது.

17. சுளுக்கு என்றால் என்ன?

ஓர் இணைப்பைச் சூழ்ந்துள்ள மென் திசுக்களுக்கு ஏற்படும் காயம். இதனால் நிறமாற்றம், வலி, வீக்கம்