பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


ஊசி போட்டுக்கொள்ளுதல். மாத்திரைகள் சாப்பிடுதல் - இது குறிப்பிட்ட காலத்திற்கே இருக்கும்.

45. நசிதல் என்றால் என்ன?

உடல் உறுப்பு செயல்திறன் இழத்தல்.

46. தன்தடுப்பாற்றல் என்றால் என்ன?

ஓர் உயிரியின் உடல் திசுக்களுக்கு எதிராகவே அவற்றில் எதிர்ப்புப் பொருள்கள் உண்டாதல்.

47. தன்நஞ்சாதல் என்றால் என்ன?

உடலுக்குள்ளேயே உண்டாகும் பொருள்களால் நஞ்சாதல் நடைபெறுதல்.

48. தொற்றுத் தடுப்பு என்றால் என்ன?

ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குத் தேவையில்லா உயிர்கள் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கை.

49. தொற்றுத் தடுப்புக்கொடி என்றால் என்ன?

தொற்றுத்தடுப்புக் கப்பலில் பறக்குங் கொடி புள்ளியுள்ள மஞ்சள் நிறங்கொண்டது. கப்பலில் எவருக்கேனும் தொற்றுநோய் இருக்குமானால் இக்கொடி பறக்க விடப்படும்.

50. தன்தொற்று என்றால் என்ன?

இது ஒரு நோய்த்தொற்று. எ-டு. பூஞ்சை தன் வாழ்க்கைக் சுற்றை ஒம்புயிரியில் முடித்தல்.

51. தொற்றல் என்றால் என்ன?

ஒரு நோய் ஒரு நோயாளியிடமிருந்து மற்றொரு நோயாளிக்குப் பரவுதல், எ-டு. சொறிசிரங்கு நீர்க்கொள்ளல்.

52. தொற்று நோய்கள் என்பவை யாவை?

காற்று, உணவு முதலியவை மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக் கூடிய நோய். எ-டு. அம்மை, காலரா.

53. முதன்முதலாக யார் எப்பொழுது அம்மை குத்தினார்?

எட்வர்டு ஜென்னர் 1796 இல் முதன் முதலாக அம்மை குத்தினார்.

54. அம்மை குத்தலுக்குத் தற்பொழுது மாற்று என்ன?

ஆவைன் செலுத்துதல்.