இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
96
55. முதல் ஆவைனை யார் எப்பொழுது கண்டுபிடித்தார்?
- 1953 இல் ஜோன்ஸ்சால்கு என்பார் கண்டுபிடித்தார்.
56. முதன் முதலில் எயிட்ஸ் நோய் எப்பொழுது ஏற்பட்டது? எங்கு?
- அமெரிக்காவில் 1980-1981 இல் ஏற்பட்டது.
57. எயிட்ஸ் நச்சியம் எப்பொழுது பிரிக்கப்பட்டது?
- 1983 இல் பிரிக்கப்பட்டது.
58. சுரப்பி நச்சியம் (அடினோ வைரஸ்) என்றால் என்ன?
- டி என் ஏ என்னும் வேதிப் பொருளைக் கொண்டுள்ள நச்சியத் தொகுதியில் ஒன்று. கால் நடை, குரங்கு மனிதன் முதலிய உயிரிகளிடம் காணப்படுவது.
59. எச் ஐ வி என்பது என்ன?
- HIV human-immuno deficiency virus. மனிதத் தடுப்பாற்றல் குறைபாட்டு நச்சியம். எயிட்ஸ் நோயை உண்டாக்குவது. உயிர்க்கொல்லி.
60. எச் ஐ வி யைக் கொண்டு நோய்களை எவ்வாறு போக்க இயலும்?
- திருடன் திருடனைப் பிடிப்பது போல, ஒரு நோயைக் குணப்படுத்த இதைப் பயன் படுத்த அமெரிக்க அறிவியலார் முயன்று கொண்டுள்ளனர். மூளையில் இதைக் கொண்டு குணப்படுத்தும் மரபணுக்களைச் செலுத்த முயற்சி செய்து கொண்டுள்ளனர். இதே போன்று கல்லீரலிலும் குருதிக் கண்ணறைகளிலும் செய்யலாம். பல நோய்களைக் குணப்படுத்த இம்முறை பயன்படும்.
61. பாஸ்டர் முறை எப்பொழுது உருவாக்கப்பட்டது?
- 1856 இல் லூயி பாஸ்டர் என்பரால் உருவாக்கப்பட்டது.
62. நுண்ணமழித்தல் என்றால் என்ன?
- வெப்பம், வேதிப்பொருள் முதலியவை கொண்டு நுண்ணுயிர்களை அழித்தல்.
63. முதலுதவி என்றால் என்ன?
ஏற்பட்ட புண் அல்லது கோளாறுக்கு உடன் வீட்டில்