பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97


செய்யப்படும் உதவி, எ-டு காயத்திற்குப் புரைத்தடுப்பு மருந்து போடுதல்.

64. வீட்டில் முதலுதவி செய்வதற்கு இருக்க வேண்டியவை யாவை?

அயோடின் கரைசல், பஞ்சு, கட்டுந் துணி, புரைத்தடுப்புக் களிம்புகள். இவற்றை முதலுதவிப் பெட்டியில் வைத்திருக்க வேண்டும்.

65. முதலுதவிப் பெட்டி எங்கு வைக்கப்பட்டிருக்கும்?

பேருந்து, தொழிற்சாலை முதலிய இடங்களில் இப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும். தொழிற்சாலைச் சட்டப்படி இது இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

66. எவ்வாழ்வு மக்கள் நல்வாழ்விற்கேற்றது.?

இயற்கையோடு இயைந்த வாழ்வு. சித்தர்கள் வற்புறுத்துவது இவ்வாழ்வையேதான்.


11. உயிர்மலர்ச்சியும் மரபுவழியும்

1. உயிரிலித் தோற்றம் என்றால் என்ன?

உயிரற்ற பொருள்களிலிருந்து உயிர்ப்பொருள்கள் தோன்றுதல்.

2. படிமுறை வளர்ச்சி அல்லது பரிணாமம் என்றால் என்ன?

எளிய உயிரிலிருந்து (அமீபா) அரிய உயிர் (மனிதன்) எவ்வாறு ஒரு மலர்ச்சியின் மூலம் தோன்றியது என்பதாகும்.

3. இதை விளக்கி அழியாப் புகழ்பெற்றவர் யார்?

சார்லஸ் தார்வின்

4. மூதாதைத் தோற்றம் என்றால் என்ன?

கால்வழியில் மூதாதையர் பண்புகள் தோன்றுதல். பெற்றோர் பண்புகள் தோன்றுதல் இல்லை.

5. நிறப்புரி (குரோமசோம்) என்றால் என்ன?

கால்வழியுள்ள மரபணு. ஓரிணை இழைப்பொருள். உயிர்வகைகளுக்குத் தகுந்தவாறு எண்ணிக்கை

வி. 7.