பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103



வெண்ணிற உப்பு. தீப்பிடிக்காத துணிகள், தாள், சிமெண்டு முதலியவை செய்யப் பயன்படுவது.

85. நீர்க்கண்ணாடி என்பது என்ன?

சோடியம் சிலிகேட்டை நீரில் கரைக்கக் கிடைப்பது. பளிங்கு போன்ற கூழ்மக்கரைசல், சிலிகா இழுது தயாரிக்கவும் பாதுகாப்புப் பொருளாகவும் பயன்படுவது.

86. இயற்கைக் கண்ணாடி என்றால் என்ன?

பளிங்கு போன்ற கணிப்பொருள். எரிமலைக் குழம்பிலிருந்து விரைவாகக் குளிர்ந்து படிகமாவது.

87. விட்டா கண்ணாடி என்றால் என்ன?

புற ஊதாக் கதிர்களைச் செலுத்தும் ஒருவகைக் கண்ணாடி.

88. வைக்கார் கண்ணாடி என்றால் என்ன?

தூய சிலிகாகண்ணாடி சோடியம் போராக்சைடிலிருந்து பெறப்படுவது.

89. வன் கண்ணாடி என்றால் என்ன?

பொட்டாசியம் சிலிகா அதிக அளவு கொண்ட கண்ணாடி. கண்ணாடிக் கலன்கள் செய்யப் பயன்படுவது. கடினக் கண்ணாடி என்றுங் கூறலாம்.

90. தேய்ப்புக்கல் என்றால் என்ன?

இயற்கையில் கிடைப்பதும் கடினமானதுமான சிலிகான் அற்றதுமான பொருள். சானை உருளைகளில் பயன்படுவது.

91. அராபினோஸ் என்றால் என்ன?

நீரில் கரையக்கூடிய வெண்ணிறப் படிகம். குச்சி வடிவ உயிர்களை வளர்க்கப் பயன்படும் கரைசலில் பயன்படுவது.

92. செயற்கைப் பொன் என்றால் என்ன?

நீரில் கரையா மஞ்சள் நிற மாநிறத் தூள். போலிப் பொன் முலாம் பூசப் பயன்படுவது.

93. பாஸ்பைன் என்பது யாது? பயன்கள் யாவை?

அதிக நச்சுத்தன்மை வாய்ந்த வளி. புகைத்திரை