பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104


செய்யவும் கப்பல்களுக்குக் கோல்கம் குறிகாட்டவும் பயன்படுவது.

94. பாஸ்பீனிகக்காடி என்றால் என்ன?

நிறமற்ற படிகம். இதன் உப்புகளில் சில நரம்பு மருந்துகள்.

95. பாஸ்பைட் என்பது என்ன?

பாசுவரிசக் காடி உப்பு.

96. பாஸ்பமிடான் என்பது என்ன? பயன் யாது?

அர்கனோ பாஸ்பேட் உப்பு. பூச்சிக் கொல்லி.

97. இதைத் தொகுத்தவர் யார்?

1955இல் பெரிகர் என்பவர் முதன்முதலில் தொகுத்தார்.

98. பாஸ்பைடு என்றால் என்ன?

பாசுவர கூட்டுப் பொருள். எ-டு. கால்சியம் பாஸ்பைடு.

99. பாஸ்போனிகக்காடி என்றால் என்ன?

பாசுவரசக்காடி பாஸ்பைட்டு உப்பைக் கொடுப்பது.

100. நின்றொளிர்தல் என்றால் என்ன?

கால்சியம் பேரியம் சல்பைடுகளின் மீது சிறிது நேரம் ஒளியூட்டிப் பின் அவற்றை இருட்டில் வை. அவை சிறிது நேரம் ஒளிரும்.

101. நின்றொளிரும் உப்புகள் யாவை?

கார வகை உலோக உப்புகள். அலுமினியச் சேர்மங்கள், யுரேனியம், பிளாட்டினம் உப்புகள்.

102? நின்றொளிர்தலின் இயல்பு யாது?

பொருள் சிறியதாக இருந்தால் அதில் முழுதும் நின்றொளரிர்தல் நிகழும். ஒளிச்செறிவையும் அலை நீளத்தையும் பொறுத்து அது அமையும்.

103. இந்த ஒளிர்தலின் பயன் யாது?

புறச்சிவப்பு நிற ஒளி இதை அழிக்கும். இப்பண்பு புறச் சிவப்பு நிற ஒளியை அறியப் பயன்படுவது.

104. பால்மெயின் ஒளிருங் குழம்பு என்றால் என்ன?

ஒளிர்வான கதிரவன் ஒளியினால் இருட்டில் பல மணி நேரம் நின்றொளிர்வது இது. இதில் கால்சியம், பேரியம், ஸ்டிரான்ஷியம் சல்பைடுகள் கலந்துள்ளன.

105. பாசுவரிக அமிலம் என்பது யாது?