பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112


178. பச்சை மாணிக்கம் என்றால் என்ன?

கடினமான உயர்ந்த வகைக்கல்.

180. ஜேவிலி நீரின் பயன்கள் யாவை?

பொட்டாசியம் அய்ப்போகுளோரைடு சேர்ந்த கரைசல். வெளுக்கவும் தொற்றுநீக்கியாகவும் பயன்படுவது.

181. நீலமணிக்கல் என்பது யாது?

நீலகுருந்தக்கல், ஒளி ஊடுருவக் கூடியது. விலை உயர்ந்த கல்.

182. மாணிக்கக்கல் (கார்னட்) என்பது யாது? பயன் யாது?

இயற்கையில் கிடைப்பது, மென்மையானது, சிலிக்கன் உள்ளது. தேய்ப்புப் பொருள். கண்ணாடித் தட்டுகளை மெருகேற்றப் பயன்படுவது.

183. ஜெர்மானியம் என்றால் என்ன? பயன் யாது?

சிலிகனை விட வீறுள்ள அரிய உலோகம். உலோகக் கலவைகள், கண்ணாடி, அரைகுறைக் கடத்திகள் ஆகியவற்றில் பயன்படுவது.

184. லூயிசைட் என்பது என்ன? பயன் யாது?

யூ.எஸ். லூயி அமெரிக்க வேதியியலர். இவர் பெயரால் அமைந்தது இந்த லூயிசைட் கொப்புள வடிவ நீர்மம். ஆர்சைன் வழிப்பொருள். வேதிப் போரில் பயன்படுவது.

185. விலங்குக்கரி என்றால் என்ன?

கரியும் (10%) கனிம உப்பும் (90%) சேர்ந்தது. நிறம்நீக்கி.

186. அனிசல்டிகைடு என்றால் என்ன?

எண்ணெய் போன்ற நீர்மம். நிறமற்றது.

187. இதன் பயன்கள் யாவை?

ஒப்பனைப் பொருள்களிலும் நறுமணப் பொருள்களிலும் பயன்படுவது.

188. கேசியஸ் ஊதா என்றால் என்ன?

வெள்ளியம் (II) குளோரைடு கரைசலுடன் பொன் (I) குளோரைடு கரைசலைச் சேர்க்கப் பொன் ஒடுக்கமடைந்து ஆழ்ந்த ஊதா நிறத்தில் கூழ்மப் பொன்னும் வெள்ளிய (IV) ஆக்சைடு கூழ்மமும் சேர்ந்த கலவை கிடைக்கும். இதுவே கேசியஸ் ஊதா.