பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10


9. இயற்பியல் வேதிஇயல் என்றால் என்ன?

வேதி இயைபில் இயற்பியல் பண்புகளின் சார்பு மற்றும் வேதி வினையில் நிகழும் இயற்பியல் மாற்றங்கள் ஆகியவற்றை ஆராய்வது.

10. கனிம வேதியியல் என்றால் என்ன?

உலோக அலோகத் தனிமங்களையும் அவற்றின் சேர்மங்களையும் ஆராயும் துறை.

11. கரிம வேதியியல் என்றால் என்ன?

அய்டிரோகார்பன்கள் அவற்றின் வழிப்பொருள்கள் ஆகியவற்றை ஆராயும் இயற்பியலின் சிறந்த பிரிவு. கரி வேதியியல் என்றுங் கூறலாம்.

12. உலோகவியல் என்றால் என்ன?

தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுக்கும் முறைகளை ஆராயும் துறை.

13. தூள் உலோகவியல் என்றால் என்ன?

உயர் வெப்ப நிலைகளில் பல வடிவங்களில் துள் உலோகங்கள் அல்லது கலவைகள் அமைக்கப்படுதலை ஆராய்வது.

14. மின் உலோவியல் என்றால் என்ன?

ஒர் உலோகத்தை அதன் தாதுவிலிருந்து பிரிக்கும் மின் முறைகளை ஆராயுந்துறை.

15. மின் வேதியியல் என்றால் என்ன?

வேதி மாற்றங்களுக்கும் மின்சாரத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை ஆராயுந்துறை.

16. உயிர் வேதிஇயல் என்றால் என்ன?

உயிர்களின் வேதிச்செயல்களையும் வேதிப் பொருள்களையும் ஆராயுந்துறை.

17. கதிரியல் வேதியியல் என்றால் என்ன?

கதிரியக்க ஒரிமங்களை (ஐசோடோப்புகள்) ஆராயுந் துறை.

18. கதிரியக்கத் தனிமம் என்றால் என்ன?

கதிர்வீச்சு ஒரிமம் (ஐசோடோப்பு) எ-டு. சோடியம்-24, அயோடின்-131.