பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131


கரிமப்பொருள். இது இயக்கியின் (புரபெல்லண்ட்) ஒரு பகுதி. மற்றொரு பகுதி ஆக்சிஜன் ஏற்றி. எரிபொருள். எரிய உதவும் பொருள் ஆகிய இரண்டினாலும் ஆனது இயக்கி, எ-டு. ஆக்சிஜன், ஆல்ககால். இவ்விரண்டில் முன்னது எரியவைக்கும் பொருள். பின்னது எரியும் பொருள். ஏவுகணை எரிபொருள்கள் இயக்கிகள் ஆகும்.

166. தொல்படிவ எரிபொருள் என்றால் என்ன?

நிலக்கரி, எண்ணெய் முதலியவை.

167. அய்டிராசின் என்றால் என்ன?

நிறமற்ற நீர்மமான ஆற்றல்வாய்ந்த ஒடுக்கி ஏவுகணை எரிபொருள்.

168. கேசோகால் என்பது என்ன?

கேசோலின். 10-50% எத்தைல் ஆல்ககால் சேர்ந்தது. அகக்கனற்சி எந்திர எரிபொருள்.

169. வளிச்சேமிப்புமானி என்றால் என்ன?

வளிதேக்கி வைக்கும் பெரிய தொட்டி

170. ஆஸ்பிரின் என்றால் என்ன?

அசெட்டைல் சாலிசிலிகக் காடி உடல் வலிநீக்கி.

171. அட்ரோபைன் என்றால் என்ன?

ஒரு காரத்தன்மையுள்ள பொருள். மருத்துவத்தில் கண்பார்வையை விரிவடையச் செய்யப் பயன்படுவது.

172. சல்பா மருந்துகள் யாவை?

சல்பனாமைடு தொகுதியுள்ள கரிமக் கூட்டுப் பொருள்கள் சேர்ந்த கலவை. நச்சுயிர் நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுபவை.

173. சல்பா கொனைடின் பயன் யாது?

சல்பனாமைடு, வயிற்றுப்போக்கை நீக்கும் மருந்து.

174. அபின் (ஓபியம்) என்பது யாது?

கசகசாச் செடியிலிருந்து பெறப்படும் போதைப்பொருள். கடத்தப்படும் பொருள்.

175. மெஸ்காலைனின் பயன் யாது?

வெண்ணிறத்தூள். மனமயக்க மருந்து.

176. நார்சைன் என்பது என்ன?