பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132


அபினுள்ளது, வெண்ணிறப்படிகம். தசையைத் தளர்ச்சியாக்கப் பயன்படுவது.

177. மரமரப்பிகள் என்றால் என்ன?

வலியை நீக்கும் அல்லது தூக்கத்தை உண்டாக்கும் மருந்துகள்.

178. சினியோலின் பயன் யாது?

ஒரு கரிமப் பொருள். மருந்துகளிலும் நறுமணப் பொருள்களிலும் பயன்படுதல்.

179. குளோராபாம் என்பது யாது?

பழைய மயக்க மருந்து.

180. குளோரியமானி என்றால் என்ன?

சலவைத் தூளிலுள்ள குளோரினை அளக்கப் பயன்படுங் கருவி.

181. குளோரோமைசிட்டினின் பயன் யாது?

நச்சுக் காய்ச்சலுக்கும் அழற்சிக்குமுரிய மருந்து.

182. சைக்ளோபுரோப்பேன் என்றால் என்ன?

இனிய மணமுள்ள நிறமற்ற வளி. மயக்க மருந்து.

183. மார்பைன் என்றால் என்ன?

அபினில் முதன்மையாகவுள்ள காரமம். வலிநீக்கி.

184. மார்போலைன் என்றால் என்ன?

நிறமற்றது. நீர் ஈர்க்கும் நீர்மம். ரெசின்களையும் மெழுகுகளையும் கரைப்பது.

185. உயிரி எதிர்ப்பிகள் என்றால் என்ன?

இவை கரிமச் சேர்மத் தொகுதிகள். நுண்ணுயிரிகளால் உண்டாக்கப்படுபவை. நுண்ணுயிர்ச் செயல்களைத் தடைசெய்பவை. எ-டு பெனிசிலின், ஸ்டெப்டோமைசின், ஆரியோமைசின், டெட்ராமைசின்.

186. பென்சால்டிகைடு என்பது யாது?

வாதுமை மனங்கொண்ட மஞ்சள் நிறக்கரிம எண்ணெய். உணவுக்குச் சுவை சேர்க்கவும், சாயங்கள், உயிரி எதிர்ப்புப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுவது.

187. பென்சீன் என்பது என்ன?

மணமுள்ள அய்டிரோகார்பன். கொழுப்பைக்