பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கரைக்கவும் உலர்சலவை செய்யவும் பயன்படுவது.

188. இதை யார் எப்பொழுது கண்டுபிடித்தார்?

பாரடே 1825இல் கண்டுபிடித்தார்.

189. பென்சாயின் என்பது யாது?

ஜாவா மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின். மூச்சுக் கட்டை நீக்கப் பயன்படுவது.

190. ஆல்டிகார்ப் என்பது என்ன?

வெண்ணிறப் படிகம்; பூச்சிக்கொல்லி.

191. பென்சல் போதியான் என்றால் என்ன?

வெளிர்மஞ்சள் நிற நீர்மம். பெரும்பான்மையான கரிமக் கரைப்பான்களில் கரையும். பூச்சிக்கொல்லி.

192. மானோ குரோட்டாபாஸ் என்பது என்ன?

நிறமற்ற படிகங்கள். பூச்சிக்கொல்லி.

193. லிண்டேன் என்றால் என்ன?

வெண்ணிற நிறமற்ற படிகம். பூச்சிக்கொல்லி.

194. மெந்தாலின் பயன் யாது?

ஆவியாகக் கூடிய முப்பட்ட வடிவப் படிகம். புரைத்தடுப்பான்.

195. மியோபாலின் பயன் யாது?

வெண்ணிறப்படிகம். பூச்சிக்கொல்லி.

196. மீப்பாசபோலனின் பயன் யாது?

அரக்குநிறமுள்ள நச்சு நீர்மம். பூச்சிக்கொல்லி.

197. மாலதியானின் பயன் யாது?

ஆர்கனோபாஸ்பேட் உப்பு. பாதுகாப்பான பூச்சிக்கொல்லி.

198. மாலிக அய்டிரசீனின் பயன்கள் யாவை?

வளர்ச்சியைத் தடுப்பது, பயிர்க்கொல்லி.

199. ஆல்டிரின் என்பது என்ன?

இது ஒரு வேதிப்பொருள். கரையான் கொல்லி.

200. இதை உருவாக்கியது யார்?

ஜெர்மன் வேதியியலார் குர்ட் ஆல்டர்.

201. குயின் கைடிரோனின் பயன்கள் யாவை?

பசும்படிகம். ஒளிப்படக் கலையிலும் எதிர் ஆக்சிஜன்