பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137232. நைலான் என்பது யாது? பயன் என்ன?

பலபடியின் ஒருவகை. சிறந்த முதல் செயற்கை இழை. குதிகுடை தூரிகை, கயிறு, நீச்சல்உடை முதலியவை செய்ய.

233. இழை அல்லது நார் என்றால் என்ன?

இது செயற்கை நார். ரேயான் முதன்முதலில் செய்யப்பட்ட நார். துணிகள் நெய்யப் பயன்படுவது. நைலான், டெரிலின் முதலியவை செயற்கை நார்கள்.

234. தாள் நிற வரைவியல் என்றால் என்ன?

கரிமச் சேர்மக்கலவைகளைப் பகுத்துப் பார்க்கப் பயன்படும் துணுக்கம். இதில் பிரிப்பு விதி பயன்படுகிறது.

235. தாள் செய்தல் என்றால் என்ன?

மூங்கில், வைக்கோல், புல் முதலியவற்றிலிருந்து தாள் கிடைக்கிறது. இவற்றிலிருந்து கிடைக்கும் கூழிலிருந்து தாள் செய்யப்படுகிறது.

236. மரக்கூழ் செய்யும் இரு முறைகள் யாவை?

1. சல்பைட்டு முறை. 2. சல்பேட்டு முறை.

237. தாள் எவ்வாறு செய்யப்படுகிறது?

வலையின் மீது செலுத்தப்படுகிறது. பின், அது சூடாக்கப்பட்ட இரும்பு உருளைகளைக்கிடையே செலுத்தப்படுகிறது. இதனால் கூழ் உலர்ந்து தாளாகிறது.

238. பசையூட்டல் என்றால் என்ன?

எழுதுவதற்குப் பயன்படும் தாள் நீர்மத்தை உறிஞ்சக் கூடியதாக இருக்கக்கூடாது. அதற்காக இதில் ஜெலாட்டின் என்னும் பசைப் பொருள் தாளில் துளைகளை அடைக்கப் பூசப்படுகிறது.

239. வண்ணக்குழைவுகள் அல்லது பூச்சுகள் என்பவை யாவை?

உலர் எண்ணெயில் நிறமிகளை இரண்டறக் கலந்து பெறப்படும் ஒருபடித்தான கலவை.

240. வண்ணக் குழைவிலுள்ள பொருள்கள் யாவை?

1. ஏற்றி (வெகிகள்) 2. உலர்த்தி. 3. நீர்ப்பி (தின்னர்). 4. உரித்தல் தடுப்பி, 5. இளக்கி, 6. நிரப்பி.