பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12

தோன்றியது.
30. நிலைத்த விதிகள் வகுத்துத் தந்த வேதியியல் அறிஞர்கள் சிலரைக் கூறுக.
ஆவோகடரோ, டியுலாங்-பெட்டிட் இலவாசியர், ஜான் டால்டன், மெண்டலீஃப்.
31. வேதியியலுக்கு முதன்முதலில் நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஆலந்தைச் சார்ந்த ஜே. எச். வாண்ட் ஆஃப் என்பார் 1901இல் வேதியியல் நோபல் பரிசு பெற்றார்.
32. தற்கால வேதியியல் தந்தை யார்?
இலவாசியர். ஆக்சிஜனுக்கும் அய்டிரஜனுக்கும் அப்பெயரிட்டவர். பிரஞ்சு வேதியியலார்,18ஆம் நூற்றாண்டு.
33. பெம்டோ வேதிஇயல் என்றால் என்ன? இதற்கு நோபல் பரிசு பெற்றவர் யார்?
மீவிரைவு வேதி வினைகளை ஆராய்வது. பேரா. அகமது செவெயில் 1999இல் இதற்காக நோபல் பரிசு பெற்றார்.

2. அடிப்படைகள்

1. பொதுப் பெயர், வேதிப் பெயர் என்றால் என்ன?
ஒரு வேதிப் பொருளுக்குப் பொதுவாக வழங்கும் பெயரும் வேதித் தன்மை அடிப்படையில் வழங்கும் பெயரும் ஆகும். சாப்பாட்டு உப்பு பொதுப் பெயர்.
2. சோடியம் குளோரைடு வேதிப்பெயர். வேதிக்குறிகள் யாவை?
சேர்தல் (+), கொடுத்தல் (-), வெப்பம் (A), கனமுள்ளது (↓), கனமற்றது (↑).
3. வேதிக்குறியீடு என்றால் என்ன?
1. அணுவின் பெயரை ஒன்று அல்லது இரண்டு எழுத்துகளில் சுருக்கமாகக் குறித்தல். எ-டு. ஆக்சிஜன், 0. வெள்ளி Ag.
2. குறிப்பிட்ட அலகைக் குறிப்பது. எ-டு. அடர்த்தி, d. நிறை m.