உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139


251. கண்ணாடித்தாள் எவ்வாறு செய்யப்படுகிறது? இதன் பயன் யாது?

காடியுடன் செல்லுலோஸ் சாந்தேட்டுக் கரைசலைச் சேர்க்க இத்தாள் கிடைக்கும். பொருள்கள் மீது சுற்றப் பயன்படுதல்.

252. செல்லுலாய்டு என்றால் என்ன?

சூடத்திலிருந்தும் செல்லுலோஸ் நைட்ரேட்டிலிருந்தும் செய்யப்படும் வெப்பப் பிளாஸ்டிக் பொருள்.

253. செல்லுலோஸ் என்றால் என்ன?

பன்மச்சர்க்கரைடு. எல்லாத் தாவரக் கண்ணறைச் சுவர்களின் சட்டகம்.

254. துப்புரவாக்கிகள் என்றால் என்ன?

சவர்க்காரம், பெட்ரோல், ஆக்சாலிகக் காடி முதலியவை. துப்புரவாக்குவதில் கறைநீக்கமும் அடங்கும். மசகை பெட்ரோல் மூலமும் எண்ணெய் வண்ணக்குழைவைக் கற்பூரத்தைலம் மூலமும் மையை ஆக்சாலிகக் காடி மூலமும் போக்கலாம்.

255. கொலாஸ்டிரால் என்பது என்ன?

கொழுப்பிலிருந்து பெறப்படும் கரிமப்பொருள். பல உயிர்ப்புச் செயல்களுக்குக் காரணம். இது உடலில் அதிகமானால் மாரடைப்பு ஏற்படும்.

256. சிட்ரேட் என்றால் என்ன?

நாரத்தைக் காடி உப்பு.

257. நாரத்தைக் காடி என்பது என்ன?

வெண்ணிறப் படிகக் காடி நாரத்தைகளின் பண்புக்குக் காரணம்.

258. இதன் உப்பு சிட்ரேட் சிட்ராலின் பயன் யாது?

எலுமிச்சையிலிருந்து பெறப்படுவது. நறுமணமூட்டும் பொருள்.

259. கேஃபின் என்றால் என்ன?

காப்பி அவரையிலும் தேயிலையிலும் உள்ள பியூரின். இதயச் செயலை ஊக்குவிப்பது. பல மருந்துகளிலும் பயன்படுவது.