பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

143


கொடிமுந்திரிப் பழத்தில் உள்ளது. இது தார்தாரிகக் காடியின் ஒளிக்குறை வடிவம்.

290. ஒளிக்குறை சேர்மமாக்கல் என்றால் என்ன?

ஒளிநிறை சேர்மத்தை ஒளிகுறை சேர்மம் ஆக்குதல். இச்செயல் வேதிமுறைகளால் நடைபெறுவது.

291. லைசர்ஜிக் காடி என்பது யாது?

நோய்க்கம்பிலிருந்து பெறப்படுவது. எல்எஸ்டி செய்யப் பயன்படுவது.

292. லைசால் என்றால் என்ன?

சவர்க்காரக் கரைசலும் ஓரகச் சீர் உருக்கிரிசோல்களும் சேர்ந்த கலவை. தொற்றுநீக்கி.

293. எழுகுளோர் என்றால் என்ன?

வெண்ணிறப் படிகம். பூச்சிக்கொல்லி.

294. ஹெக்சானியிகக்காடி என்றால் என்ன?

நிறமற்ற எண்ணெய் போன்ற நீர்மம். செயற்கை மணமூட்டப் பயன்படுவது.

295. ஹெக்சைல் ரெசார்சினால் என்றால் என்ன?

மஞ்சள் நிறப்படிகம். புரைநீக்கி, மருந்து.

296. இண்டோல் என்பதின் பயன் யாது?

மஞ்சள் நிறப்பொருள். நறுமணப்பொருள்களில் பயன்படுவது.

297. எல்எஸ்டி (LSD) என்றால் என்ன?

லைசர்சிக் காடி இரு எத்திலமைடு, உளக்கோளாறு உண்டாக்கும் மருந்து, மனமயக்கத்தையும் தடுமாற்றத்தையும் தருவது. இளைஞர்கள் இக்கொடிய பழக்கத்திற்கு அடிமைகள்.

298. ஷிஃப்காரம் என்பது என்ன?

நறுமண அமைனுக்கும் ஆல்டிகைடுக்கும் இடையே நடைபெறும் குறுக்கல் வினையில் தோன்றுங் கூட்டுப்பொருள்.

299. ஷிஃப் விளையாக்கி என்றால் என்ன?

ஆல்டிகைடுகளையும் கீட்டோன்களையும் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள்.

300. பைரோகேலால் என்பது யாது? பயன்கள் யாவை?