பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16

படிகப் பின்னல் அமைவில் துகள்களின் கட்டுக்கோப்பான அமைப்பில் காணப்படும் ஒழுங்கின்மை.
28. இதன் வகைகள் யாவை?
1. புள்ளிக் குறைபாடு.
2. வரிக்குறைபாடு.
29. வினைவளி என்பது யாது?
எரிபொருள். மிக வெப்பமுள்ள நிலக்கரியின் மீது சிறிது நீராவியையும் காற்றையும் செலுத்திப் பெறப்படுவது.
30. விளைபொருள் என்றால் என்ன?
வேதிவினையில் உண்டாகும் புதிய கூட்டுப் பொருள். மக்னீசியத்தைக் காற்றில் எரிக்க மக்னீசியம் ஆக்சைடு
31. இடப்பெயர்ச்சியின் வகைகள் யாவை?
1. காற்றின் கீழ்முகப் பெயர்ச்சி - காற்று கீழ்சென்று இலேசான வளி மேல் வருதல். எ-டு. அம்மோனியா.
2. காற்றின் மேல்முகப் பெயர்ச்சி - காற்று மேல் சென்று கன வளி கீழ்வருதல். எ-டு. குளோரின்.
3. நீரின் கீழ்முகப் பெயர்ச்சி - வளி மேல் சென்று நீரைக் கீழ்த் தள்ளுதல். எ-டு. அய்டிரஜன்.
32.மெழுகுவத்திச் சுடரிலுள்ள நான்கு மண்டலங்கள் யாவை?
1. கருநிற மண்டலம் இதிலுள்ள வளிகள் எரியுந்தன்மை உள்ளவை
2. ஒளிமண்டலம் - இங்குள்ள வளிகள் எரிந்து உண்டாகும் நுண்ணிய இம்மிகள் சூடடைந்து இம் மண்டலத்திற்கு ஒளியைத் தருகின்றன.
3. ஒளிர்வற்ற மண்டலம் - இங்கு வளிகள் முற்றிலும் ஆக்சிஜன் ஏற்றம் அடைகின்றன. ஒளிர்வு குறைவு.
4. நீலநிற மண்டலம் - வெப்பம் மிகுதி. இங்கு எரிதல் நிறைவு பெறுகிறது.
33. செந்தழல் நோக்கி என்றால் என்ன?
கதிர்வீச்சு வெப்பத்தின் செறிவை அளக்கப் பயன்படுங் கருவி.
34. செந்தழல் ஆய்வு என்றால் என்ன?
கனிமங்களைத் தீச்சுடர் மூலம் ஆய்ந்து பார்த்தல்.