பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17


35. செந்தழல் பகுப்பு என்றால் என்ன?

மீஉயர் வெப்பநிலைகளுக்கு உட்படுத்தி, வேதிப் பொருள்களைச் சிதைத்தல்.

36. செந்தழல்மானி என்றால் என்ன?

கதிர்வீச்சு விதிகளைப் பயன்படுத்தித் தொலைவிலிருந்து மீவெப்ப நிலைகளைப் பதிவு செய்தல்.

37. செந்தழல் அளவை என்றால் என்ன?

செந்தழல்மானியைக் கொண்டு கதிர்வீச்சு உமிழும் உயர் வெப்பநிலைகளை அளப்பது.

38. அணு என்றால் என்ன?

ஒரு வேதிவினையில் கலந்து கொள்ளும் ஒரு தனிமத்தின் மிகச் சிறிய பகுதி.

39. மூலக்கூறு என்றால் என்ன?

ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் மிகச் சிறியதும் அதன் பண்புகளைப் பெற்றதும் தனித்தியங்குவதுமான நிலைத்த துகள் மூலக்கூறுவாகும். எ-டு. நீர். இதில் அய்டிரஜனும் ஆக்சிஜனும் (2:1) உள்ளன.

40. அனுப்பிணைவு என்றால் என்ன?

பருப்பொருள் மூலக்கூறுகளுக்கிடையே உள்ள கவரும் ஆற்றல் அவற்றை ஒன்றுபடுத்துகின்றன. பாதரசம் கையில் ஒட்டாததற்கு இதுவே காரணம்.

41. அலகுச் செயல்முறைகள் யாவை?

வேதிமுறைகளில் நன்கு அறியப்பட்ட படி நிலைகளாவன: 1. காய்ச்சி வடித்தல். 2. உப்பீனி ஏற்றம். 3. ஆல்கைலாதல் 4. நைட்ரோ ஏற்றம். 5. வெந்தழல் சிதைவு. 6. தொழிற்சாலை முறையாக்கல். 7. வடிவமைப்பிற்குரிய பயன்பாடு.

42. கருவிவயமாக்கல் என்றால் என்ன?

ஒரு வேதிநிலையத்தினுள் செயல்முறைகளைக் கட்டுப்படுத்தலும் நிலைமைகளை அளத்தலும் ஆகும்.

43. இச்செயலிலுள்ள மூவகைக் கருவிகள் யாவை?

1. நடப்புச் செய்திக்குரிய கருவிகள். பாதரச வெப்பநிலை மானி, எடைமானி, அழுத்த அளவிகள்.


வே.2.