பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19


ஒரு மாதிரியின் அதிக பகுதிகளை அடையாளங் கண்டறிதலாகும்.

5. தரம் பார்த்தல் என்றால் என்ன?

பருமனறி நுணுக்கம். இதில் செறிவு தெரிந்த ஒரு கரைசல் செறிவு தெரியாத ஒரு கரைசலோடு முடிவு நிலை தெரியும் வரை சேர்க்கப்படுகிறது. இஃது இயற்பியல் வேதியியலில் ஒர் அடிப்படைச் செயல்முறை.

6. இயல்மை (நார்மாலிட்டி என்றால் என்ன?

ஒரு லிட்டர் கரைசலில் உள்ள கிராம் சமான எடைகளின் எண்ணிக்கை.
ஒரு லிட்டர் கரைசலில் கரை பொருளின் எடை
கரைபொருளின் கிராம் சமான எடை

7. இயல்புக்கரைசல் என்றால் என்ன?

ஒரு கிராம் சமான எடையுள்ள கரைபொருள் 1 லிட்டர் கரைப்பானில் கரைந்திருத்தல்.

8. கிராம் அயனி என்றால் என்ன?

ஒர் அயனியிலுள்ள அணு எடைகளின் தொகை. கிராமில் கூறப்படுவது.

9. கிராம் மூலக்கூறு எடை என்றால் என்ன?

ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் மூலக்கூறு ஒன்றின் எடை, ஒரு அய்டிரஜன் அணுவின் எடையை விட எத்தனை மடங்கு கனமாக உள்ளதோ, அந்த எண்ணிக்கை அத்தனிமத்தின் அல்லது சேர்மத்தின் மூலக்கூறு எடை எனப்படும்.

மூலக்கூறு எடை = பொருளின் மூலக்கூறு ஒன்றின் எடை

அய்டிரஜன் அணு ஒன்றின் எடை

10. மோல் என்பதை வரையறு.

தூய கார்பன்12 இன் 12 கிராம்களில் எத்தனை அணுக்கள் உள்ளனவோ அத்தனை அடிப்படைத் துகள்கள் உள்ள பொருளின் அளவு. இங்குத் துகள்கள் என்பவை அணு, அயனி, மூலக்கூறு, படிமூலி ஆகியவற்றைக் குறிக்கும். அதாவது, ஒரு மோல் 6.022045 x 1023