பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20


அடிப்படைத் துகள்களைக் கொண்டிருக்கும்.

11. மோலமை என்றால் என்ன?

ஒரு கிலோகிராம் தூய கரைப்பானிலுள்ள கரை பொருளின் மோல்களின் எண்ணிக்கை. மோலால் என்பது கரைபொருளின் எடையைக் குறிப்பது.

12. மோலாரிமை என்றால் என்ன?

ஒரு லிட்டர் கரைசலிலுள்ள கரைபொருளின் மோல்களின் எண்ணிக்கை. மோலார் என்பது கரைபொருளின் பருமனைக் குறிப்பது.

13. மோல் பின்னம் என்பது என்ன?

ஒரு கரைசலிலுள்ள ஒரு பொருளின் மோல்களின் எண்ணிக்கைக்கும் அக்கரைசலிலுள்ள அனைத்துப் பொருள்களின் மோல்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வீதம். இதற்கு அலகில்லை வெறும் எண்.

14. இணைதிறன் என்றால் என்ன?

ஓர் அணு மற்றொரு அணுவோடு சேருந்திறன் அல்லது மற்றொரு அணுவை விலக்குத் திறன். இத்திறன் அணுக்களுக்குத் தக்கவாறு வேறுபடும். இது ஒரு முழு எண்.

15. சில தனிமங்களின் இணைதிறன் யாது? அய்டிரஜன் 1, அக்சிஜன் 2, நைட்ரஜன் 3, கரி 4, பாசுவரம் 5, கந்தகம் 6

16. ஆவியடர்த்தி என்றால் என்ன?

ஒரே பருமனுள்ள அய்டிரஜன் நிறைக்கும் குறிப்பிட்ட பருமனுள்ள பொருளின் நிறைக்கும் உள்ள வீதம். ஒத்த வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் அளக்கப்படுவது. அய்டிரஜன் அடர்த்தியினை 1 என்று கொள்ள, வளியின் சார்பு மூலக்கூறு நிறையின் பாதிக்கு இவ்வீதம் சமமாகும். (1 : 1/2)

17. குறிப்பி என்றால் என்ன?

ஒரு வேதிச்செயலை ஆராயப் பயன்படும் கதிரியக்கக் கருவைடு என்னும் வேதிப் பொருள்.

18. குறியிட்ட சேர்மம் என்றால் என்ன?