பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21


ஓர் அணுவின் கதிரியக்க ஓரிமத்தால் அதன் நிலையணு பெயர்க்கப்படும் சேர்மம்.

19. குறியிடல் என்றால் என்ன?

ஓரிமங்களைக் கொண்டு உயரிய வேதிவினைகளை ஆராயும் நுணுக்கம், காட்டாக, ஒரு கதிரியக்க ஓரிமத்தைக் கொண்டு அணுக்களைப் பதிலீடு செய்து ஒரு சேர்மத்தைத் தொகுக்க இயலும். பின் உண்டாகும் கதிரியக்கத்தைக் கொண்டு அச்சேர்மத்தில் நடைபெறும் வினைப்போக்கைப் பின்தொடரவும் இயலும்.

20. தொகை சார்பண்புகள் யாவை?

1. ஆவி அழுத்தத்தைக் குறைத்தல்
2. கொதிநிலையை உயர்த்துதல்.
3. உறைநிலையைத் தாழ்த்தல்.
4. ஊடுபரவழுத்தம்

21. மின்னிணை என்றால் என்ன?

இரு அணுக்களிடையே பகிர்ந்து கொள்ளப்படும் மின்னணுக்கள். இது ஒற்றை இணைப்பிணைப்பை உண்டாக்குவது.

22. பிரிகை, பிரிகை மாறிலி என்றால் என்ன?

ஒரு மூலக்கூறு இரு மூலக்கூறுகளாகிய அணுக்களாகவும் படிமூலிகளாகவும் பிரிதல். இவ்வினையின் நடுநிலை மாறி, பிரிகை மாறிலி எனப்படும்.

23. வீதமாறிலி என்றால் என்ன?

ஒப்பு வினைத்தகவு (K). ஒரு வேதிவினைக்குரிய வீத வெளிப்பாட்டின் வீதப் பொருத்த மாறிலி.

24. வினைவீதம் என்றால் என்ன?

ஓரலகு நேரத்தில் ஒரு வேதிவினையில் செலவழியும் வினைபடுபொருளின் அளவை.

25. மின்வேதி இணைமாற்று என்றால் என்ன?

ஒரு கூலும் மின்சாரத்தை மின்பகுளிக் கரைசல் வழியாகச் செலுத்தும்பொழுது, விடுபடும் தனிமத் தொகுதி. அல்லது தனிமக் கிராம்களின் எண்ணிக்கை