பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23


இதில் வேற்றுருக்கள் ஒன்றோடு மற்றொன்று இயக்கச் சமநிலையில் இருக்கும்.

32. எதிர்வேற்றுருமை என்றால் என்ன?

ஒரு தனிமத்தின் வேறுபட்ட நிலைத்த அயல் வேற்றுருக்கள் வேறுபட்ட வெப்பநிலைகளில் அமைந்திருத்தல்.எ-டு. கந்தகம். இதைப் புறவேற்றுமை என்றுங் கூறலாம்.

33. உலோகப்போலி என்றால் என்ன?

உலோகப் பண்பையும் அலோகப் பண்பையும் பெற்றிருப்பது.எ-டு. சவ்வீரம், அண்டிமனி.

34. உள்ளீட்டு வெப்பம் என்றால் என்ன?

H. ஒரு தொகுதியின் பருமன் (V) அழுத்தம் (P) ஆகிய இரண்டின் பெருக்குத் தொகையோடு அதன் உள்ளாற்றலை (V) சேர்க்க வரும் கூடுதல். H=U+ PV, சுருக்கமாக இதனை ஒரு பொருளின் வெப்ப அடக்கம் எனலாம்.

35. மாற்றீட்டு வெப்பம் என்றால் என்ன?

மீள்மாற்றம் பெறும் ஒரு தொகுதியில் மாறுவெப்பமடைதலின் வரையறை இதுவே. உறிஞ்சப்பட்ட வெப்பத்தை வெப்ப இயக்க வெப்பநிலையால் வகுத்துக் கிடைக்கும் ஈவாகும்.

36. மாற்றீட்டு வெப்பப்படம் என்றால் என்ன?

மாற்றீட்டு வெப்பங்களைக் காட்டும் படம்.

37. நிற வரைவியல் என்றால் என்ன?

பொருள்களைப் பகுத்துப் பார்க்கும் முறை. பல கூட்டுப் பொருள்களைத் தேர்வுமுறையில் பிரிந்து அவற்றை இனங்காணல்.

38. இதன் வகைகள் யாவை?

1. தாள் நிறவரைவியல். 2. மென்படல நிற வரைவியல், வளிநீர்ம வரைவியல். 4. பிரிப்பு நிற வரைவியல் எனப்பலவகை.

39. வேறுபடுவினை என்றால் என்ன?

ஒரே பொருளின் ஏற்றமும் இறக்கமும் ஒரே சமயம்