பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26


இதில் சிறிது வெப்பம் உடனிகழ்ச்சியாக இருக்கும். எ-டு. மக்னீசியத்தைக் காற்றில் எரிக்கக் கண்தூசு ஒளி உண்டாகும்.

61. மீள்மாற்றம் என்றால் என்ன?

ஒரு தொகுதியின் அழுத்தம், பருமன் முதலிய பண்புகளில் ஏற்படும் மாற்றம். இதில் மாற்றம் முழுவதும் தொகுதியில் நடுநிலையில் இருக்கும்.

62. மீள்மாறுவினை என்றால் என்ன?

முதல் நிலையிலிருந்து மாறுநிலைக்கும் மாறுநிலையிலிருந்து முதல் நிலைக்கும் உட்படும் விதிவினை.

N2+ 3H2⇔ ZNH3

63. பசைத்தொங்கல் என்றால் என்ன?

சேறு. நீர்மத்தில் தொங்கும் திண்மத் துகள்களின் மெல்லிய பசை.

64. கூழ்மம் என்றால் என்ன? வகை எத்தனை?

இது ஒரு படித்தான தொகுதி. 1. திண்மம் -மணிகள். 2. நீர்மம் - தயிர். 3. வளி - புகை.

65. கூழ்மத்தின் பயன்கள் யாவை?

1. கூழ்மத்தங்கமும் கால்சியமும் ஊட்டமருந்துகள்.
2. கூழ்மவெள்ளி நுண்ணுயிர்க்கொல்லி.
3. மக்னீசியப் பால் வயிற்றுக்கோளாறுகளுக்கு மருந்து.

66. இடுக்கிணைப்பு என்றால் என்ன?

உலோக ஒருங்கிணை அசைவு. கொடுக்கிணைப்பு என்றுங் கூறலாம்.

67. ஓரகப்பண்புடைமை (ஒருபடித்தான) என்றால் என்ன?

ஓர் ஊடகத்தின் அளக்கப் பெற்ற இயல்பண்பு திசையைச் சாராதிருக்கும் பண்பு. இத்தகைய பொருள்கள் ஓரகப் பண்பிகள்.

68. மேல் ஒருபடிச் சீரியம் (ஐசோமெரிசம்) என்றால் என்ன?

ஒருபடிச் சீரியத்தின் ஒருவகை. இதில் மேல் ஒருபடிச்சீரிகள் ஓஎச் தொகுதி நிலைகளில் வேறுபடும். எ-டு. குளுகோசின் ஆல்பா பீட்டா வடிவங்கள்.