பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27


69. ஓரகச் சீரியம் (ஐசோமெரிசம்) என்றால் என்ன?

மாற்றியம். கரிமச்சேர்மங்களின் சிறப்பியல்பு. ஒரே மூலக்கூறு வாய்பாடு வெவ்வேறு பண்புகளைக் கொண்டது. இரண்டிற்கு மேற்பட்ட சேர்மங்களைக் குறிப்பது. எ-டு: C2H4O.

70. ஓரகச்சீர்மங்கள் (ஐசோமெர்கள்) என்றால் என்ன? C2H4O என்னும் மூலக்கூறு வாய்பாடு எதில் ஆல்ககாலையும் இருமெதில் ஆல்ககாலையும் குறிக்கும். இத்தகைய சேர்மங்களில் ஒரகச் சேர்மங்கள் எனப்படும் கரியின் சேர்மங்கள் மிகுதியாக இருப்பதற்கு இவ்வியல்பே காரணமாகும்.

4. வேதிக்கருவிகள்

1. பெட்ரி கிண்ணம் என்பது யாது?

பெட்ரி என்பவர் பெயரால் அமைந்தது. தட்டை அடியுள்ள வட்டக் கண்ணாடிக் கிண்ணம்.

2. புக்கனர் புனல் என்றால் என்ன?

புக்கனர் வைத்துாற்றி உறிஞ்சுதல் மூலம் வடிக்கட்டப் பயன்படும் பீங்கான் புனல்.

3. நைட்ரோமானி என்றால் என்ன?

நைட்ரஜனையும் அதன் சேர்மங்களையும் மதிப்பிடுங் கருவி.

4. வெள்ளி உப்புமானி என்றால் என்ன?

கரைசலிலுள்ள வெள்ளியின் அளவை அளக்கப் பயன்படும் கருவி.

5. உல்ப் குப்பி என்பது என்ன?

இரு கழுத்துள்ள கண்ணாடிச்சீசா. நீர்மத்தின் வழியாக வளியைச் செலுத்தப் பயன்படுவது.

6. புடக்குகை என்றால் என்ன?

பொருள்களை உயர்வெப்பநிலைக்குச் சூடாக்கும் பீங்கான் கிண்ணம்.

7. நிறமானி என்றால் என்ன?