32
திண்மத்தை நீர்மத்திலிருந்து பிரிக்கும் முறை, திண்மத்தைப் படியவைத்து நீர்மத்தை ஊற்றுதல்.
15. வடிபொருள் என்றால் என்ன?
வடிகட்டல் மூலம் பெறப்படும் பொருள். கலவையைப் பிரிக்கும் முறை. உப்புக்கரைசலை வடிதாள் வழியாகச் செலுத்தத் தாளின் மேல் உப்பும் முகவையில் வடிபொருளும் (நீர்) கிடைக்கும்.
16. வடிகட்டல் என்றால் என்ன?
கலவையைப் பிரிக்கும் முறைகளில் ஒன்று. வடிதாள், உருக்கி இணைத்த ஒன்று. வடிதாள், உருக்கி இணைத்த கண்ணாடி முதலியவை வடிகட்டிகள்.
17. வடித்த நீர் என்றால் என்ன?
காய்ச்சி வடித்தல் மூலம் தூய்மை செய்யப்பட்ட நீர். ஊசிமருந்து கலக்கவும் வேதி ஆய்வுகள் செய்யவும் பயன்படுவது.
18. வண்டல்படிதல் என்றால் என்ன?
மைய விலக்கியினாலோ ஈர்ப்பினாலோ தொங்கல் படிதல். துகள்களின் சராசரி அளவை மதிப்பிட படிதல் விரைவு பயன்படும்.
19. இதன் பயன் யாது?
இந்நுணுக்கம் மைய விலக்கி உதவியுடன் பெரு மூலக்கூறுகளின் சார்பு மூலக்கூறு நிறை காணப்பயன்படுதல்.
20. கரைத்து நீக்கல் என்றால் என்ன?
நிறவரைவியல் கம்பத்தில் கரைப்பான் மூலம் பரப்பூன்று பொருளை நீக்குதல்.
20. சிதைத்து வடித்தல் என்றால் என்ன?
காற்றுப் புகாக் கலத்தில் நிலக்கரியைப் போட்டு நன்கு வெப்பப்படுத்த, நிலக்கரி பிரிந்து பல பொருள்களின் ஆவிகளை வெளிவிடும். இவற்றை வடித்துப்பகுத்தல் வாயிலாகப் பிரிக்கலாம்.
22. பிரித்தல் என்றால் என்ன?
1. தாதுவிலிருந்து உலோகத்தை நீக்குதல்.