உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35


அதன்மீது படியும். இது வெப்ப ஆவியாக்கல், எதிர் மின்வாய் உமிழ்வு ஆகிய முறைகளில் செய்யப்படுகிறது.

41. மண்டலத் தூய்மையாக்கல் என்றால் என்ன?

சில உலோகங்கள், உலோகக் கலவைகள் அரைகுறைக் கடத்திகள் முதலியவற்றிலுள்ள மாசுகளின் அளவைக் குறைக்கப்பயன்படும் நுணுக்கம்.

42. உறைக்கடினமாக்கல் என்றால் என்ன?

எஃகின் மேற்பரப்புக் கடினத் தன்மையை உயர்த்தும் முறை. இம்முறை பல்லிணை, கிறங்குதண்டுகள் ஆகியவற்றின் பகுதிகள் செய்வதில் பயன்படுகிறது.

43. குறுக்கம் என்றால் என்ன?

வளியை அல்லது ஆவியைக் குளிர்வித்து நீர்மம் அல்லது திண்மமாக மாற்றுதல்.

44. குறுக்கலினை என்றால் என்ன?

இதில் இரு மூலக்கூறுகள் சேர்ந்து ஒரு மூலக்கூறு நீங்குதல். இது வழக்கமாக நீர். இதனைக் கூட்டு நீங்கல் வினை எனலாம். இவ்வினை ஆல்டிகைடுகளுக்கும் கீட்டோன்களுக்குமுள்ளது.

45. அடர்ப்பித்தல் என்றால் என்ன?
1. துத்தநாகத்தை அதன் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறைகளில் ஒன்று.
2. அடர்வு, ஒரு கரைசலின் ஓரலகு பருமனின் பொருள் அளவு, அலகு மோல்.

46. தூய்மையாக்கல் என்றால் என்ன?

தாதுவிலிருந்து பிரித்தெடுத்த உலோகத்தைத் தூய்மை படுத்தும் முறை. இதற்கு மின்னாற்பகுப்பு பயன்படுவது. எ-டு. துத்தநாகம்.

47. நுரைமிதப்பு என்றால் என்ன?

தாதுக்களிலிருந்து தாதுக்கனிமத்தைப் பிரிக்கும் முறை. அழுத்தப்பட்ட காற்று நுரைப்பி சேர்க்கப்பட்ட தாதுக் கலவையில் நுரை உண்டாகுமாறு சேர்க்கப்படுகிறது. இச்செயலால் தாதுத்துகள் நீங்குகின்றன.

48. சுடர் ஆய்வு என்றால் என்ன?