பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39


82. ஓலர் தொகுப்பு என்றால் என்ன?

ஓலர் சேர்க்கை. 1828இல் பிரடரிக் ஒலர் என்பார் தொகுத்த யூரியா.

6. வேதிவினைகளும் விதிகளும்

(1) வேதிவினைகள்

1. இயல்பு மாற்றம் என்றால் என்ன?

புதிய பொருள் உண்டாகாத தற்காலிக மாற்றம். எ-டு. பனிக்கட்டி உருகி நீராதல்.

2. வேதி நிறுத்தி என்றால் என்ன?

வேதி வினையை நிறுத்தும் பொருள்.

3. வேதிவினை என்றால் என்ன?

இரண்டிற்கு மேற்பட்ட பொருள்கள் வினைபுரிவதால், புதிய பொருள்கள் தோன்றுதல். இவ்வினையைச் சமன்பாடு தெரிவிக்கும்.

Н2 + О2 → 2Н2О

4. வேதிமாற்றம் என்றல் என்ன?

புதிய பொருள்கள் உண்டாகக் கூடிய நிலைத்த மாற்றம். எ-டு. துருப்பிடித்தல்.

5. வேதி மாற்றத்தில் உண்டாகும் நிகழ்ச்சிகள் யாவை?

வெப்பம், ஒலி, ஒளி, நிறமாற்றம்.

6. வேதிமாற்றத்தைத் தூண்ட வல்ல காரணிகள் யாவை?

நெருங்கிய தொடர்பு, சூடாக்கல், ஒளி, மின்சாரம்.

7. வேதி மாற்றத்தின் வகைகள் யாவை?

1. வேதிக்கூடுகை வேதிச் சேர்க்கை. இதில் இரண்டிற்கு மேற்பட்ட பொருள்கள் சேர்ந்து ஒரு புதிய பொருளை உண்டாக்கும்.

2Mg+ O2 → 2MgO.

2. இடப்பெயர்ச்சி - இதில் ஒரு தனிமம். ஒரு சேர்மத்திலுள்ள மற்றொரு தனிமத்தை வெளியேற்றித் தான் அவ்விடத்தை அடைவது.

Zn + H2SO2 → ZnSO4 + H2