பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40


3. வேதிச்சிதைவு - ஒரு சேர்மம் சிதைவுற்று ஒன்றுக்கு மேற்பட்ட தனித்த பொருள்களாக மாறுதல்.

2Hgo → 2Hg + O2.

4. இரட்டைச் சிதைவு - இரு வேதிப் பொருள்கள் வினையாற்றும் பொழுது அவற்றின் உறுப்புகள் இடம் மாறி இரு புதிய பொருள்கள் உண்டாதல்.

CuSO4 + 2NaOH → Na2SO4 + Cu(OH)2

8. வேதியாற்றல் என்றால் என்ன?

இது பிணைப்பாற்றலே. ஒர் அணு அல்லது மூலக்கூறிலுள்ள ஆற்றலில் ஒரு பகுதியை வேதிவினை விடுவிக்கும். கட்டு அறுபடும் பொழுது, அணுக்கள் பிரிந்து பிணைப்பாற்றல் வெளிப்படும்.

9. ஆக்சிஜன் ஏற்றி என்றால் என்ன?

எரிதலை உண்டாக்கும் உயிர் வளியைத் தரும் பொருள். எ-டு. அய்டிரசன் பெராக்சைடு.

10. ஆக்சிஜன் ஏற்றம் என்றால் என்ன?

ஒரு மூலக்கூறிலிருந்து நேரயனிகள் நீங்கல் அல்லது எதிரயனிகள் சேர்தல் அல்லது அய்டிரஜன் நீங்கல். உயிர் வாழத் தேவைப்படும் ஓர் அடிப்படைச் செயல்.

11. ஆக்சிஜன் ஏற்ற இறக்கம் என்றால் என்ன?

ஆக்சிஜன் ஏற்றத்தையும் ஒடுக்கலையும் குறிப்பது. இரண்டும் பின்னிப் பிணைந்தவை. ஆக்சிஜன் ஏற்றச் செயலின் உடனிகழ்ச்சி ஒடுக்கச் செயல்.

12. இவ்விரு செயல்களும் மின்வாயில் எவ்வாறு நடை பெறுகின்றன?

நேர்மின்வாயில் ஆச்சிஜன் ஏற்றமும் எதிர்மின்வாயில் ஒடுக்கலும் நடைபெறுகின்றன. இச்செயல்கள் மின் வேதியியல் முறைகள் சார்ந்தவை.

13. ஆக்சிஜன் ஏற்றி நீக்கல் என்றால் என்ன?

ஆக்சிஜன் ஏற்றத்தின் மூலம் கரி இரு ஆக்சைடையும் அய்டிரஜனையும் நீக்கல்.

14. ஆக்சிஜன் ஏற்றிப் பாஸ்பேட்டாக்கல் என்றால் என்ன?

ஓர் ஆற்றல் மிகு பிணைப்பு மூலம் ADP கரிமப்