பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42


நடைபெறுவதால் வெப்பமும் ஒளியும் உண்டாகும். ஆகவே, இது வேதிமாற்றமே. பொசுங்கும் பொருள்கள் எரியும்.

24. வெடித்தல் என்றால் என்ன?

விரைவான எரிதலால் உண்டாகும் வளிகள் பெருகும் பொழுது ஏற்படும் உடன் வெடிப்பு. இது கடுமையாக இருக்கும். சிறிய இடத்தில் வளிகளை அடைத்துப் பற்றவைக்கும் பொழுது அவை பெருகி வலுவான விசையை உண்டாக்க வல்லவை. இவ்விசையினாலேயே வெடித்தல் ஏற்படுகிறது. எ-டு. சீனிவெடி வெடித்தல்.

25. பெர்முடிட் என்றால் என்ன?

நீரில் கரைந்துள்ள தேவையில்லாத பொருளை நீக்கும் வேதிப் பொருள். இது சீயோலைட் சோடியம் அலுமினியம் சிலிகேட்.

26. நிலைகாட்டிகள் என்றால் என்ன?

நிறங்காட்டிகள். காடியாகவோ உப்பு மூலியாகவோ இருக்கும். வேதிப்பொருள்கள் தம் நிற மாற்றத்தால் வேதி வினையைக் காட்ட வல்லவை. எ-டு. மீத்தைல் கிச்சிலி, மீத்தைல் ஊதா.

27. குளோரின் நீக்கிகள் என்றால் என்ன?

சலவைத்தூளால் வெளுக்கப்பட்ட துணிகளிலுள்ள அதிகப்படியான குளோரினை நீக்கும் பொருள். எ-டு. சோடியம் தயோசல்பேட்டு, கந்தக இரு ஆக்சைடு, சோடியம் சல்பேட்டு.

28. ஆக்சைடு என்றால் என்ன?

ஆக்சிஜன் உள்ள இரு தனிச் சோடியம். எ-டு. மாங்கனிஸ் இரு ஆக்சைடு.

29. ஆக்சிஜன் ஏற்றும் அமிலம் எது?

நைட்டிரிக் அமிலம், கந்தக அமிலம்.

30. ஆக்சிஜன் அளவியல் என்றால் என்ன?

ஓடும் குருதியில் ஆக்சிஜன் செறிவை அளத்தல்.

31. பலவகை ஆக்சைடுகளைக் கூறுக.

ஓராக்சைடு - கரி ஓராக்சைடு ஈராக்சைடு - கரி இரு