உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45


மின்னணு இணை பகிர்ந்து கொள்ளப்படுவதால் உண்டாகும் பிணைப்பு. எ-டு. மீத்தேன். இதில் கரி, நீர், வளி ஆகிய இரண்டிற்கிடையே உள்ள பிணைப்பு இணைப்புப் பிணைப்பு.

51. ஈதல் பிணைப்பு என்றால் என்ன?

இது ஓர் இணைப் பிணைப்பு. இதில் இரு தனி மின்னணுக்களுக்கும் ஒரே ஒரு அணுவால் மட்டும் பிணைப்பு வழங்கப்படுகிறது. எ-டு. பொரான் முப்புளோரைடு, அம்மோனியா ஆகிய இரண்டும் சேர்ந்து உண்டாகும் சேர்ப்புச் சேர்மம். இதில் நைட்ரஜன் இரு தனி மின்னணுக்களைப் பொரானுக்குக் கொடுத்து ஈதல் பிணைப்பை ஏற்படுத்துகிறது.

52. வேதிப்பிணைப்புக்கு உட்படா அணுக்கள் யாவை?

ஈலியம், நியான், ஆர்கன்.

53. பிணைப்பு நீளம் என்றால் என்ன?

வேதிக்கட்டில் சேர்க்கப்படும் இரு அணுக்களின் கருக்களுக்கிடையே உள்ள தொலைவு.

54. பிணைப்பு முனைத்திறன் என்றால் என்ன?

மின்னணுக்களை ஈர்க்கும் வேதிப் பிணைப்பிலுள்ள இரு அணுக்களின் திறனிலுள்ள வேறுபாடு.

55. பார்போர்டு வினையாக்கி என்றால் என்ன?

செம்பு (II) அசெட்டேட்டு, எத்தனாலிகக் காடி ஆகிய இரண்டும் சேர்ந்த கலவை. ஒற்றைச் சர்க்கரைகளைக் கரைசல் நிலையில் ஆய்ந்து பார்க்கப் பயன்படுவது. இக்கலவையை ஒற்றைச் சர்க்கரையுடன் சேர்த்து வெப்பப்படுத்தச் செம்பு (I)ஆக்சைடின் செந்நிறவீழ்படிவு உண்டாகும்.

56. பெனிடிக்ட் கரைசல் என்றால் என்ன?

சோடியம் சிட்ரேட்டு, சோடியம் கார்பனேட்டு, செம்பு (II) சல்பேட்டு ஆகிய மூன்றும் சேர்ந்த கலவை.

57. இதன் பயன் யாது?

ஒடுங்கு சர்க்கரைக் கரைசலை ஆய்ந்து பார்க்கப் பயன்படுவது. சர்க்கரைக் கரைசலோடு இக்கரைசலைச்