பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46


சேர்த்து வெப்பப்படுத்தச் செம்பு (1)ஆக்சைடின் செந்நிற வீழ்படிவு உண்டாகும்.

58. டோலன் வினையாக்கி என்றால் என்ன?

அனைவுஅயனி. Ag(NH3)2+, இன் கரைசல். இந்த ஆய்வு ஆல்டிகைடுகளையும் ஆல்கைன்களையும் கண்டறியப் பயன்படுவது.

59. பேயர் வினையாக்கி என்றால் என்ன?

இது காரப் பொட்டாசியம் பர்மாங்கனேட். இவ்வினையாக்கியை ஆல்கேன் நிறமற்றதாக்கும் நிறைவுறாத்தன்மைக்கு இது ஆய்வு.

60. கேரியஸ் முறை எதற்குப் பயன்படுகிறது?

கரிமச்சேர்மங்களில் காணப்படும் ஹேலஜன்கள் (உப்பீனிகள்), பாசுவரம், கந்தகம் ஆகியவற்றைக் கண்டறியப் பயன்படுவது.

61. சீசெல்வினை என்றால் என்ன?

ஒரு கரிமச் சேர்மத்திலுள்ள மீத்தாக்சைல் தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதி செய்யும் முறை.

62. இதை உருவாக்கியவர் யார்?

1886இல் சீசெல் என்பவர் உருவாக்கினார்.

63. வர்ட்ஸ் வினை என்றால் என்ன?

உலர் ஈத்தரில் சோடியத்தைச் சேர்த்து ஒர் ஏலோ ஆல்கேனை நீரோட்டத்தில் கொதிக்கவைத்து ஆல்கேன்கள் தயாரிக்கும் முறை.

64. கிரிஸ் வினையாக்கி என்பது என்ன?

சல்போனிலிகக் காடியின் கரைசல். ஆல்பா நாப்தைல் அமைனும் அசெட்டிகக் காடியும் நீரில் சேர்ந்த கரைசல். நைட்ரசக் காடியைக் கண்டறியப் பயன்படுவது.

65. நைலாந்தர் வினையாக்கி என்றால் என்ன?

பொட்டாசியம், சோடியம் டார்டரேட்டு, பொட்டாசியம் அய்டிராக்சைடு ஆகியவை கரைந்த கரைசல். சிறுநீரில் சர்க்கரை இருப்பதைக் கண்டறியப் பயன்படுதல்.

66. பயால் வினையாக்கி என்பது யாது?