பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49


 சேர்க்கப்படுகிறது. இப்பொழுது தோன்றும் ஊதாநிறம் புரதம் இருப்பதைக் காட்டுகிறது.

(2) வேதி விதிகள்

84. போல்ட்ஸ்மன் மாறிலி என்றால் என்ன?

ஆவோகடரோ மாறிலிக்கும் அனைத்து வளி மாறிலிக்குமுள்ள வீதம்.

85. ஆவோகடரோ மாறிலி என்றால் என்ன?

ஒரு மோல் பொருளிலுள்ள அணுக்களின் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கை இதன் மதிப்பு 6.02252.x 1023. இதன் பழைய பெயர் ஆவோகடரோ எண்.

86. ஆவோகடரோ கருதுகோள் என்றால் என்ன?

ஒரே வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் உள்ள பல வளிகளின் பருமன் சமமானால், அவற்றிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும். இவ்விதி கேலூசாக்கின் பருமனளவு விதியை நன்கு விளக்குகிறது. இதை இவர் 1811 இல் முன்மொழிந்தார்.

87. டியுலாங்-பெட்டிட் விதி யாது? இதன் சிறப்பு யாது?

திண்மநிலையில் இருக்கும் ஒரு தனிமத்தின் வெப்ப எண், அதன் அணு எடை ஆகியவற்றின் பெருக்குத்தொகை மாறா எண்.

அணு எடைx வெப்ப எண் = 2.68x104.

அணு எடை 20க்கு மேற்பட்ட பல உலோகங்கள் இவ்விதிக்குக் கட்டுப்படுபவை. கரி, பொரான், சிலிகான் முதலிய உலோகங்கள் இவ்விதிக்கு உட்படுவதில்லை.

89. வேதிக்கூடுகை விதிகள் யாவை?

1. பொருண்மை அழியா விதி - வேதிமாற்றம் நிகழும்பொழுது உருவாகும் வினைப் பொருள்களின் மொத்த பொருண்மை வேதிமாற்றத்தில் ஈடுபட்ட வினைப்படுபொருள்களின் மொத்தப் பொருண்மைக்கு ஈடாகும். 1789இல் இவ்விதியை இலாவசியர் வெளியிட்டார்.

2. மாறாவீத விதி - ஒரு சேர்மத்தை எம்முறையில்

வே.4.