பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51



சில வகைக் கரிம வினைகளில் தோன்றும் வினைப்பொருள்களைப் பற்றிய விதிகள். அமெரிக்க வேதிஇயலார் இராபர்ட் உட்வோர்டு, ஆஃப்மன் ஆகிய இருவரும் 1969இல் உருவாக்கியது.

96. லோரி-பிரான்ஸ்டெட்டு கருத்து யாது?

இதன்படி ஒரு முன்னணுவைக் கொடுக்கும் பொருள் காடி. அம்முதலனுவை ஏற்கும் பொருள் காரம். அதாவது காடி என்பது முதலணு கொடுப்பி. காரம் என்பது முதலணு ஏற்பி.

97. லூயிஸ் காடி என்றால் என்ன?

ஈதல் பிணைப்பை உருவாக்க ஒரு மின்னணு இணைவை ஏற்கும் பொருள்.

98. லூயிஸ் உப்பு மூலி (காரம்) என்றால் என்ன?

இது ஒரு மின்னணுவை அளிப்பது.

99. லூயிஸ் கருத்து என்பது யாது?

இதன்படி ஒரு மின்னணு இரட்டையை ஏற்றுக் கொள்ளும் பொருள் காடி. அம்மின்னணு இரட்டையைக் கொடுக்கும் பொருள் காரம்.

100. அர்கீனியஸ் கொள்கையின் எடுகோள்கள் யாவை?

1. அயனிகள் எனப்படும மின்னேற்றத் துகள்களாக மின்பகுளிகள் பிரிகின்றன. இவை நேரயனிகளும் எதிரயனிகளும் ஆகும்.

2.மின்பகுளி முழுதுமாக நடுநிலை கொண்டது. ஆகவே, நேரயனியின் மொத்த மின்னேற்றம் எதிரயனிகளின் மொத்த மின்னேற்றத்திற்குச் சமம்.

3. அயனிவயமடையாத மூலக்கூறுகளுக்கும் பிரிந்த அயனிகளுக்குமிடையே சமநிலை உள்ளது.

4. மின்பகுளிக்கரைசல் வழியாக மின்னோட்டம் செல்லும்பொழுது, எதிர்மின்வாய் நேரயனியைக் கவர்கிறது. மின்பகுளிக் கரைசலில் மின்கடத்து திறனுக்குக் காரணம் அக்கரைசலிலுள்ள அயனிகள் இயக்கமே ஆகும்.

5. அயனிகளின் பண்புகளே மின்பகுளிக் கரைசலின்