பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54


12. காடி எண் என்றால் என்ன?

ஒரு கிராம் பொருளில் தடையில்லாமலுள்ள காடிகளை நடுநிலையாக்கத் தேவைப்படும் பொட்டாசியம் அய்டிராக்சைடின் மில்லிகிராம் எண்ணிக்கை.

13. காடியளவை என்றால் என்ன?

கரைசலிலுள்ள காடியளவை உறுதிசெய்தல்.

14. இது எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது?

கரைசலின் வலுவை அளப்பதன் வாயிலாக இதனை உறுதி செய்யலாம்.

15. அடர்மிகுகாடி என்றால் என்ன?

நீர் சேராத அமிலம். எ-டு அடர் கந்தக அமிலம்.

16. நீர்த்தகாடி என்றால் என்ன?

நீர் சேர்ந்த காடி நீர்த்த கந்தகக் காடி.

17. அரசநீர்மம் (ராஜ திரவம்) என்றால் என்ன?

அடர்அய்டிரோ குளோரிகக் காடியும் அடர்நைட்டிரிகக் காடியும் 3:1 என்னும் வீதத்தில் சேர்ந்த கலவை.

18. இதன் பயன் யாது?

அதிக அரிப்புத்தன்மை உள்ளதால் பொன், பிளாட்டினம் ஆகிய உலோகக் கலவைகளைக் கரைக்கப்படுவது.

19. நைட்டிரிகக் காடி என்பது யாது?

புகையும் நிறமற்ற நீர்மம், மருந்துகள், சாயங்கள், வெடிமருந்துகள் செய்யப் பயன்படுவது.

20. நைட்ரேட்டாதல் என்றால் என்ன?

நைட்ரசமோனாஸ் என்னும் நச்சியம், அம்மோனியாவை நைட்ரேட்டு உப்பாக மாற்றும் செயல்.

20. வெடிகாடி என்பது யாது?

நைட்டிரிகக்காடி

22. வெடிபஞ்சு என்பது யாது?

நைட்ரிகக் காடியையும் கந்தகக் காடியையும் பஞ்சில் சேர்த்துச் செய்யப்படுவது. தரையில் அடித்தாலோ வலுவாக வெப்பப்படுத்தினாலே எளிதில் எரிந்து வெடிப்பது. வெடிபொருள்களில் பயன்படுவது.