பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55


23. பிஏஎச் அல்லது பாரா அமினோ கிப்பூரிகக் காடியின் பயன் யாது?

1. கணிம (பிளாஸ்மா) ஒட்டத்தை அளக்க, 2. பொருளின் கணிமச் செறிவையும் சிறுநீர்ச் செறிவையும் உறுதிசெய்யப் பயன்படுவது.

24. காரம் என்றால் என்ன?

கரிப்பு, காரச்சுவை, சிவப்புப் பூஞ்சுத்தாளை நீலமாக்குதல் கொண்ட கனிம வேதிப்பொருள்.

25. காரத்தின் இருவகைகள் யாவை?

1. வன்காரம்- சோடியம் அய்டிராக்சைடு.

2. மென்காரம்- அம்மோனியம் அய்டிராக்சைடு.

26. காரமை என்றால் என்ன?

காரத்தன்மை.

27. பூஞ்சு (லிட்மஸ்) என்றால் என்ன?

தாவரத்தோற்றமுள்ள கருஞ்சிவப்புப் பொருள். காடியில் சிவப்பாகும் காரத்தில் நீலமாகும் இதனால் செய்யப்பட்ட தாள் பூஞ்சுத்தாள் ஆகும்.

28. நடுநிலையாக்கல் என்றால் என்ன?

காடியும் காரமும் ஒன்றை மற்றொன்று சிதைத்துக் கொள்ளும் வினை. இதனால் கிடைப்பது உப்பு.

29. நடுநிலையாக்கி என்றால் என்ன?

காடியை நடுநிலையாக்கும் பொருள். எ-டு சோடியம் இரு கார்பனேட்

30. இதன் பயன் யாது?

பொதுவாக இது காரப்பண்பு அளிக்கும். இரைப்பைத் தூள்களிலும் கலவைகளிலும் பயன்படுவது.

31. உப்பு என்பது என்ன?

காடியும் காரமும் ஒன்றுடன் மற்றொன்று வினைப்படும்பொழுது உண்டாகும் கரிப்புப்பொருள்.

32. உப்பின் வகைகள் யாவை?

1. இயல்பான உப்புகள் - பொட்டாசியம் குளோரைடு.

2. காடியுப்புகள் - சோடியம் இரு கார்பனேட்