பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56


3. கார உப்புகள் - காரக்காப்பர் கார்பனேட்

4. கலப்பு உப்புகள்--சோடியம் பொட்டாசியம் சல்பேட்

5. இரட்டை உப்பு - பொட்டாஷ் படிகாரம்.

6. அணைவு உப்புகள் -பொட்டாசியம் பெரோசயனைடு.

33. உப்புத்துண்டு என்பது என்ன?

தொழிற்சாலைச் சோடியம் சல்பேட்

8. தனிமம், சேர்மம், கலவை

1. தனிமம் என்றால் என்ன?

மூலகம். ஒரே அணுஎடை கொண்ட அணுக்களால் முழுதுமான பொருள். பொதுவான வேதிமுறைகளால் எளிய பொருள்களாகச் சிதைக்க முடியாது.

2. இதன் வகைகள் யாவை?

1. உலோகம் - இரும்பு. 2. அலோகம் - கரி.

3. நீர்ம நிலையில் இருக்கும் ஒரே உலோகம் யாது?

பாதரசம்.

4. நீர்ம நிலையில் இருக்கும் ஓர் அலோகம் யாது?

புரோமின்

5. அண்மைக் காலம் வரை எத்தனை தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

118 தனிமங்கள்.

6. அன்னில் பெண்டியம், அன்னி ஹெக்சியம் என்பவை யாவை?

அன்னிஸ் பெண்டியம் தனிமம் 105.

அன்னிஸ் ஹெக்சியம் தனிமம் 106.

7. தனிமங்களின் பண்புகள் யாவை?

1. பெரும்பாலும் எளிதில் கடத்திகள்.

2. உலோகம் அலோகம் என இருவகை.

3. திண்ம, நீர், வளி நிலைகளில் இருப்பவை.

4. உலோகப்போலி உண்டு. புறவேற்றுமையும் உண்டு.

5. கம்பிகளாக்கலாம், தகடாக்கலாம்.

8. தனிம இணைவு என்றால் என்ன?