பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57


மூலக்கூறுகள் உண்டாகத் தனிமம் தன்னை இணைத்துக் கொள்ளுதலும் அவ்வாறு செய்தலுக்குரிய பண்பும் ஆகும்.

9. அல்லோபார் என்றால் என்ன?

இயற்கையில் இல்லாத ஒரு தனிமத்தின் ஒரிமங்களைக் (ஐசோடோப்புகள்) கொண்ட கலவை.

10. ஒப்பளவு என்றால் என்ன?

தனிமங்களிடையே ஒரு தனிமம் இருக்கும் சார்பளவு. காட்டாகப் புவிஒட்டில் ஆக்சிஜனின் அளவு 50%

11. பயனுறுதனிமம் என்றால் என்ன?

உயிரியின் இயல்பான வளர்ச்சிக்குத் தேவையான தனிமங்களுக்குத் தேவையான தனிமங்களில் ஒன்று.

12. ஓரிமம் (ஐசோடோப் என்றால் என்ன?

ஓரிடத்தனிமம். வேறுபட்ட நிறையும் ஒரே அணு எண்ணுங் கொண்ட தனிமத்தின் அணுக்கள். எ-டு செனான் - 135. செனானுக்கு 22 ஓரிமங்கள் உண்டு.

13. ஓரிமத்தின் பயன்கள் யாவை?

1. வேதிவினைகளை ஆராய. 2. மருத்துவத்துறையிலும் வேளாண்துறையிலும் பயன்படுதல். 3. குழாய்களில் எண்ணெய்க் கசிவைக் கண்டறியப் பயன்படுகின்றன. 4. இயக்க ஆய்வுகளில் பயன்படுதல்.

14. ஆஸ்டன் என்பவர் யார்?

1912இல் இவர் தாம் புதிதாகப் புனைந்த நிறை நிறமாலை வரைவியைக் கொண்டு ஓரிமங்களைக் (ஐசோடோப்புகள்) கண்டறிந்தார்.

15. சேர்மம் என்றால் என்ன?

கூட்டுப்பொருள். இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட வீதத்தில் சேர்ந்து உண்டாகும் ஒருபடித்தான கலவை. இதன் பகுதிப் பொருள்களை எளிய இயற்பியல் முறைகளால் பிரிக்க இயலாது. இது வேதிமாற்றத்திற்கு உட்பட்டது. எ-டு நீர், H20. பொதுவாகத் தனிமத்தின் உப்புகள் கூட்டுப் பொருள்களே.

16. சேர்மத்தின் இரு வகைகள் யாவை?