பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59


கூட்டுப் பொருள். சிலிகேட்டுகள் இத்தகைய கூட்டுப் பொருள்களை உருவாக்குபவை. எ-டு. டால்க், பைரோபைலட்

27. பலபடிச் சேர்மம் என்றால் என்ன? எளிய மூலக்கூறுகளின் நீள்வரிசை கொண்ட சேர்மம். ஒரே செயல்நிலை வாய்பாடு. ஆனால் அதிக மூலக்கூறு எடை கொண்டது.

28. இதன் வகைகள் யாவை?

1. இயற்கைப் பலபடிச் சேர்மம் - புரதங்கள்.

2. செயற்கைப் பலபடிச் சேர்மம் - பாலிதிலீன்.

29. நீரின் வேதிப்பெயர் என்ன? அய்டிரஜன் ஆக்சைடு, H,O.

30. நீர் என்றால் என்ன? அய்டிரஜனும் ஆக்சிஜனும் 2:1 என்னும் வீதத்தில் கலந்துள்ள கூட்டுப் பொருள்.

31. நீரின் பயன்கள் யாவை?

1. அனைத்துக் கரைப்பான், 2. குளிர்விப்பி. 3. ஆக்சிஜன் கரைந்துள்ளதால் நீர்வாழ் உயிர்களை வாழவைக்கிறது. 4. வேளாண்மைக்குப் பெரிதும் உதவுவது.

32. டியூட்ரியம் என்றால் என்ன? D. இது கன அய்ட்டிரஜன் ஆகும்.

33. கடினத்தன்மை என்றால் என்ன?

கால்சியம், மக்னீசியம் ஆகிய இரு உலோகங்களின் உப்புகள் நீரில் கரைந்திருப்பதால் ஏற்படுவது கடினத்தன்மை.

34. கடினத்தன்மை எத்தனை வகைப்படும்?

இருவகைப்படும். 1. தற்காலிகக் கடினத்தன்மை. 2. நிலைத்த கடினத்தன்மை.

35. தற்காலிகக் கடினத் தன்மை என்றால் என்ன?

கால்சியம், மக்னிசியம் ஆகியவற்றின் இரு கார்பனேட்டுகள் நீரில் கரைந்திருப்பதால் உண்டாகும் கடினத்தன்மை.

36. தற்காலிகக் கடினத்தன்மையை எவ்வாறு போக்கலாம்?