பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60


 கொதிக்கவைத்தல் மூலமும் கால்சிய அய்டிராக்சைடைச் சேர்ப்பதின் மூலமும்போக்கலாம்.

37. நிலைத்த கடினத்தன்மை என்றால் என்ன?

கால்சியம், மக்னீசியம் ஆகியவற்றின் குளோரைடு, சல்பேட்டு உப்புகள் நீரில் கரைவதால் உண்டாவது.

38. நிலைத்த கடினத்தன்மையை எவ்வாறு போக்கலாம்?

சோடியம் கார்பனேட் பெர்முடிட் ஆகிய இரண்டின் மூலம் போக்கலாம்.

39. கடினத்தன்மையைப் பொறுத்து நீர் எத்தனை வகை?

1. மென்னிர் 2. கடினநீர்.

40. மென்னிர் என்றால் என்ன?

சவர்க்காரத்தைச் சேர்க்க நுரை கொடுக்கும் நீர்.

41. கடினநீர் என்றால் என்ன?

சவர்க்காரத்தைச் சேர்க்க நுரை கொடுக்காதது கடினநீர்

42. கனநீர் என்றால் என்ன? அதன் பயன் யாது?

டியூட்டிரியம் ஆக்சைடு. இதில் அய்டிரஜன் டியூட்டிரியத்தினால் பதிலீடு செய்யப்படுகிறது. н,o+ D,<> D,o +н, அணுஉலைகளில் சீராக்கியாகவும் வளர்சிதைமாற்ற ஆய்வுகளில் துலக்கியாகவும் பயன்படுகிறது.

43. கலவை என்றால் என்ன?

இரண்டிற்கு மேற்பட்ட பொருள்கள் வீத அளவு மாறிச் சேர்ந்தது. தகுந்த இயற்பியல் முறைகளில் இதிலுள்ள பகுதிகளைப் பிரிக்கலாம். எ-டு உப்புக்கரைசல்.

44. காற்று ஒரு கலவையா கூட்டுப் பொருளா?

கலவை

45. கலவைக்கும் சேர்மத்திற்குமுள்ள முக்கிய வேறுபாடுகள் யாவை?

கலவையில் பகுதிகள் குறிப்பிட்ட வீதத்தில் இரா. சேர்மத்தில் குறிப்பிட்ட வீதத்தில் இருக்கும். கலவையில் நடைபெறுவது இயல்பு மாற்றம். சேர்மத்தில் நடைபெறுவது வேதிமாற்றம்.

46. இயைபுறுப்பு என்றால் என்ன?