பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61


ஒரு கலவையிலுள்ள தனிம வேதிப் பொருள்களில் ஒன்று. இக்கலவையில் வேதிவினை நிகழாது. எ-டு நீர் பனிக்கட்டி சேர்ந்த கலவை. ஒர் இயைபுறுப்பு கொண்டது. நைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்த கலவை. இரு இயைபுறுப்புகள் கொண்டது.

47. ஊறித்தல் (லீச்சிங்) என்றால் என்ன?

கரைபொருளைக் கரைப்பானைக் கொண்டு வெளுத்தல்.

48. நீர்மக் காற்று என்றால் என்ன?

வெளிறிய நீலநிறமுள்ள காற்று. முதன்மையாக நீர்ம ஆக்சிஜனையும் நீர்ம நைட்ரஜனையும் கொண்டது.

49. நற்கலவை என்றால் என்ன?

உறைநிலை மாறாக் கலவை. இரு பொருள் குறிப்பிட்ட வீதத்தில் அமைந்திருப்பதால், அதே பொருளைக் கொண்ட மற்ற எந்தக் கலவையும் குறைந்த உருகுநிலையைக் கொண்டிராது.

50. கரைசல் என்றால் என்ன?

கரைப்பானும் கரைபொருளும் சேர்ந்த ஒருப்படித்தான கலவை.

51. கரைசலின் வகைகள் யாவை?

1. நிறைவுறுகரைசல் - குறிப்பிட்ட வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் கரைப்பானில் கரைய வேண்டிய அளவுக்குக் கரைபொருள் கரைந்து அதில் கொஞ்சம் கரைபொருள் தங்குதல்.

2. நிறைவுறாக் கரைசல் - அவ்வாறு தங்காத கரைசல்.

52. கரைப்பான் என்றால் என்ன?

கரையவைக்கும் பொருள். நீர்.

53. கரைபொருள் என்றால் என்ன?

கரைப்பானில் கரையும் பொருள்.

54. உப்பு கரைப்பான் விரும்பும் கூழ்மம் என்றால் என்ன?

ஒரு நீர்மத்தில் கூழ்மத் தொங்கலில் எளிதில் சேரும் பொருள்.

55. கரைப்பான் வெறுக்கும் கூழ்மம் என்றால் என்ன?

கூழ்ம நிலையில் இருக்கும் பொருள். ஆனால்,